Published:Updated:

ஹஜாரேவின் ஒத்துழைப்பு கோரும் மன்மோகன் சிங்.. செய்திச் சுருக்கம் : ஆகஸ்ட் 24, 2011

ஹஜாரேவின் ஒத்துழைப்பு கோரும் மன்மோகன் சிங்.. செய்திச் சுருக்கம் : ஆகஸ்ட் 24, 2011
ஹஜாரேவின் ஒத்துழைப்பு கோரும் மன்மோகன் சிங்.. செய்திச் சுருக்கம் : ஆகஸ்ட் 24, 2011

புதுடெல்லி, ஆக.24, 2011

ஹஜாரேவின் ஒத்துழைப்பு கோரும் மன்மோகன் சிங்.. செய்திச் சுருக்கம் : ஆகஸ்ட் 24, 2011

வலுவான லோக்பால் மசோதா உருவாவதற்கு, காந்தியவாதி அண்ணா ஹஜாரே ஒத்துழைப்பு மனப்பான்மையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.

லோக்பால் மசோதா தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தொடங்கியது.

மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் மற்றும் பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தின் தொடக்கத்தின் பேசிய பிரதமர், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், வலுவான லோக்பால் உருவாவதற்கு, நிலைக்குழுவிடம் அனைத்து கருத்துகளையும் தெரிவித்து, அதன் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதல்கள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். ##~~##

அதேவேளையில், வலுவான லோக்பால் மசோதா 4 நாட்களுக்குள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அண்ணா ஹஜாரே குழு கெடு விதித்துள்ளது.

*

லோக்பால் மசோதா விவகாரத்தில் தங்களது அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை தமது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அண்ணா ஹஜாரே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

*

ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா கோரி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் புதன்கிழமை 9-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்துள்ள அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

*
மத்திய அரசுக்கும் அண்ணா ஹஜாரே தரப்புக்கும் இடையே புதன்கிழமையும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும் வகையிலேயே இருந்தது என சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார்.

*
அண்ணா ஹஜாரே குழுவின் ஜன் லோக்பால் மசோதாவுக்கு பிஜேபி ஆதரவளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு ஆதரவளிக்கத் தவறினால் தமது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்றும் பிஜேபி மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.

*

அதிமுக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி, சட்டப்பேரவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. இதில் தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் தமிழக அரசை வாழ்த்திப் பேசினர்.

பின்னர் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் இலவசங்கள் இல்லாத நிலையை உருவாக்குவதும், தமிழக மக்கள் எக்காலத்திலும் யாரிடமும் கையேந்தும் நிலை இருக்கக் கூடாது என்பதுமே தன் வாழ்வின் லட்சியம் என்று கூறினார்.

*

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சாட்சியாக நீதிமன்றத்தில் விசாரிப்பதற்கு ஆஜராகுமாறு பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் கபில் சிபல் ஆகியோருக்கு சம்மன் அனுப்புமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தை முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, ஸ்பெக்ட்ரம்  வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதால், செப்டம்பர் 15-ம் தேதிக்குள் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

*
இந்தியாவில் உள்ள அணு உலைகள் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும், நமது நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள் உலகத் தரத்துக்கு இணையாக மிக பாதுகாப்பாக உள்ளது என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

*
நாடாளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்பிக்களுக்கு பணம் தரப்பட்ட விவகாரத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமர்சிங் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

*
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளர் ஆகிய 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி, ஆகஸ்ட் 26-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை மனித நடைபெறும் சங்கிலி போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பழ.நெடுமாறன் அழைப்பு விடுத்துள்ளார்.

*
கடந்த திமுக ஆட்சியில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலர் தவறு செய்துள்ள போதிலும், அவர்கள் மீது நடவடிக்‍கை எடுப்பதற்கு பதிலாக அவர்களை வைத்தே வேலை வாங்குவதுதான் சாமர்த்தியம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

*
லிபியாவின் ட்ரிபோலி நகரை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், தன் உயிருள்ளவரை போர் தொடரும் என்று அந்நாட்டு அதிபர் கடாபி அறிவித்திருக்கிறார்.

*
மும்பை பங்குச்சந்தையில் புதன்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 213 புள்ளிகள் வீழ்ச்சி கண்டிருந்தன. நிஃப்டி 60 புள்ளிகள் சரிந்திருந்தன.

*
சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 2,599 ரூபாயாக இருந்தது.

*
இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், 16 ஆண்டுகாலமாக அர்ப்பணிப்புடன் அணிக்காக விளையாடியவருமான பைச்சங் புடியா, தாம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு