Published:Updated:

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பா.ஜ.க. அரசு தப்புமா?

Vikatan Correspondent
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பா.ஜ.க. அரசு தப்புமா?
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பா.ஜ.க. அரசு தப்புமா?
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: பா.ஜ.க. அரசு தப்புமா?

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. எதிர்த்து வாக்களிக்க போவதாக சிவசேனா அறிவித்திருந்தாலும், தேசியவாத காங்கிரஸ் உதவியுடன் பா.ஜனதா வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பா.ஜனதாவிற்கு எதிராக, காங்கிரசும், சிவசேனாவும் வேட்பாளர்களை நிறுத்தின. இதனால் சிவசேனா- பா.ஜனதா கட்சிகளுக்கிடையேயான உறவில் இதுவரை சுமூகமான முடிவு எட்டப்படாத நிலையே காணப்படுகிறது.

இதனிடையே, சபாநாயகர் தேர்தலில் காங்கிரசும், சிவசேனாவும் போட்டியிலிருந்து விலகியுள்ளன. தங்களது வேட்பாளர்களை திரும்பப் பெறுவதாக இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. இரு கட்சிகளும் விலகியதால் பா.ஜ.க.வின் ஹரிபாவ் பாக்தே சபாநாயகராக தேர்வாகிறார்.

அதேவேளையில், மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமைய பா.ஜனதாவிற்கு ஆதவு அளிப்பதாக தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளதால், நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா அரசு உறுதியாக வெற்றி பெற முடியும்.

இந்நிலையில், தன்னுடைய உறுப்பினர்களை தவறாமல் சட்டப்பேரவையில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ள தேசியவாத காங்கிரஸ், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்வதா அல்லது தவிர்ப்பதா என்பது குறித்தும் சபாநாயகர் தேர்தல் தொடர்பாகவும் அப்போது முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

சபாநாயகர் தேர்தலை எதிர்ப்பில்லாமல் நடத்துவதற்காக, அப்பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களை திரும்பப்பெறுமாறு காங்கிரஸ், சிவசேனா கட்சிகளை முதலமைச்சர் தேவிந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே சிவசேனா சட்டப்பேரவை உறுப்பினர்களை அக்கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து பேசினார். இன்று காலை 11 மணி அளவில் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைவரும் தவறாமல் சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று உறுப்பினர்களை உத்தவ் தாக்கரே வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.