Published:Updated:

மகாராஷ்ட்ரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா அரசு வெற்றி!

Vikatan Correspondent
மகாராஷ்ட்ரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா அரசு வெற்றி!
மகாராஷ்ட்ரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா அரசு வெற்றி!

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில்,  முதலமைச்சர் பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா அரசு வெற்றி பெற்றது.

மகாராஷ்ட்ரா: நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதா அரசு வெற்றி!

குரல் வாக்கெடுப்பு  ஓட்டு மூலம் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா கட்சியின் ஒரே ஒரு எம்.எல்.ஏ. வும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பா.ஜனதாவை ஆதரித்தார்.

ஏற்கனவே அறிவித்தபடி சிவசேனா,  பா.ஜனதா அரசுக்கு எதிராக வாக்களித்தது. அதேப்போன்று காங்கிரஸ் கட்சியும் எதிராக வாக்களித்தது.

பா.ஜனதாவுக்கு ஆதரவாக தேசியவாத காங்கிரஸ் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே

இந்நிலையில் மகாராஷ்ட்ரா சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகர் போட்டியின்றி தேர்வு

முன்னதாக சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் நிறுத்தப்பட்ட   ஹரிபாவ் பாக்தே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மறுவாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் கோரிக்கை

இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தவிதம் ஏற்புடையதல்ல என்றும், குரல் வாக்கெடுப்புக்குப்பதிலாக வாக்களிப்பு முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ள முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான பிரித்விராஜ் சவாண், பா.ஜனதா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

"எதிர்க்கட்சிகள் வாக்கெடுப்பு நடத்த கோரியது. ஆனால் அக்கோரிகை நிராகரிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா அரசு ராஜினாமா செய்ய வேண்டும். மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறாதவரை சட்டசபையை நடத்தவிட மாட்டோம். இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து முறையிடுவோம்" என மகாராஷ்ட்ரா பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்ராவ் தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனாவும் எதிர்ப்பு

அதேப்போன்று சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் தீர்ப்புக்கு மாறாக பா.ஜனதா அரசு மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.