Published:Updated:

ஜெயலலிதா படம்போட்ட புத்தக பைகள் மாணவர்களுக்கு விநியோகம்!

Vikatan Correspondent
ஜெயலலிதா படம்போட்ட புத்தக பைகள் மாணவர்களுக்கு விநியோகம்!
ஜெயலலிதா படம்போட்ட புத்தக பைகள் மாணவர்களுக்கு விநியோகம்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4  ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதாவின் படம் போட்ட பாடப்புத்தக பைகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
 

ஜெயலலிதா படம்போட்ட புத்தக பைகள் மாணவர்களுக்கு விநியோகம்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்து விட்டார். புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டாலும் அரசு அலுவலகங்கள் உள்பட எல்லாவற்றிலும் ஜெயலலிதாவின் படங்கள்தான் இடம் பெறுகின்றன. இதை அகற்ற வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தாண்டு ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 படிக்கும் 90 லட்சம் மாணவர்களுக்கு ரூ.120 கோடி செலவில் பாடப்புத்தக பைகள் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 'அனைவருக்கும் கல்வித் திட்டம் இயக்குனரகம்' மூலம்தான் இந்த பணிகள் நடக்கிறது. தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பாடப்புத்தக பைகளிலும் வழக்கம் போல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம் பதித்த படம்தான் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னினை தொடர்பு கொண்டு கேட்ட போது, மாணவர்களுக்கு பாட புத்தக பைகள் அச்சிடும் பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாதான் என்பதால் இந்த புது பைகளிலும் அவரது படம் இடம் பெற்றுள்ளது. மற்றபடி இதில் எதுவும் இல்லை" என்று சிம்பிளாக சொல்லி முடித்துக்கொண்டார்.

-எம்.கார்த்தி

படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்