Published:Updated:

மோடியை அழைக்காத காங்கிரசின் சிறிய மனது: பா.ஜனதா

Vikatan Correspondent
மோடியை அழைக்காத காங்கிரசின் சிறிய மனது: பா.ஜனதா
மோடியை அழைக்காத காங்கிரசின் சிறிய மனது: பா.ஜனதா
மோடியை அழைக்காத காங்கிரசின் சிறிய மனது: பா.ஜனதா

புதுடெல்லி: நேருவின் பிறந்த நாள் விழாவுக்கு மோடிக்கு அழைப்பு விடுக்காதது காங்கிரசின் சிறிய மனதை காட்டுகிறது என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் 125வது பிறந்த நாள் விழாவையொட்டி, காங்கிரஸ் சார்பில் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் சர்வதேச மாநாடு நடத்தப்படுகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு உலக தலைவர்கள் மற்றும் இந்தியாவிலுள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறுகையில், ''ஜனநாயகத்தையும், நேருவின் சித்தாந்தங்களையும் உண்மையாக நம்புபவர்களுக்கு மட்டுமே நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். எனவே, பிரதமர் மோடிக்கு அழைப்பு கொடுக்கவில்லை'' எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு பதிலளித்துள்ள பா.ஜ.க.வின் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், ''காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு அதிர்ச்சி அளிக்கவில்லை. நேரு இந்தியாவின் முதல் பிரதமர். நரேந்திர மோடி தற்போதைய பிரதமர். நேருவின் கொள்கைகளை மோடி நம்பவில்லை எனக் கூறி, நேருவின் சர்வதேச மாநாட்டுக்கு, மோடிக்கு அழைப்பு விடுவிக்காதது நகைப்புக்குரியது'' என்றார்.