Published:Updated:

உயர் ஜாதிக்காரர்கள் வெளிநாட்டினர்: பீகார் முதல்வர் மாஞ்சி பேச்சு!

Vikatan Correspondent
உயர் ஜாதிக்காரர்கள் வெளிநாட்டினர்: பீகார் முதல்வர் மாஞ்சி பேச்சு!
உயர் ஜாதிக்காரர்கள் வெளிநாட்டினர்: பீகார் முதல்வர் மாஞ்சி பேச்சு!
உயர் ஜாதிக்காரர்கள் வெளிநாட்டினர்: பீகார் முதல்வர் மாஞ்சி பேச்சு!

பேட்டியா: உயர் ஜாதியினர் அனைவரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆரிய இன வம்சாவளியில் வந்தவர்கள் என்று பீகார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி கூறியுள்ளது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, பீகார் மாநிலம் பேட்டியா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாஞ்சி பேசுகையில்," நம் நாட்டில் உள்ள உயர் ஜாதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வெளிநாட்டினரே. அவர்கள் ஆரிய இன வம்சாவளியில் வந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்து குடியேறிவர்கள்தான் அவர்கள்.

பழங்குடி இனத்தவரும், தலித்துகளும்தான் நம் நாட்டைச் சேர்ந்தவர்கள். எனவே இவர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், அரசியல் விழிப்புணர்வு உடையவர்களாகவும் மாற வேண்டும். பீகாரில் அரசுகளை அமைப்பதில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் முக்கிய பங்காற்றுவதை உறுதிப்படுத்த இதைச் செய்ய வேண்டும்" என்றார்.