Published:Updated:

இன்ஸ்ட்டாகிராமையும் விட்டுவைக்காத மோடி!

Vikatan Correspondent
 இன்ஸ்ட்டாகிராமையும் விட்டுவைக்காத  மோடி!
இன்ஸ்ட்டாகிராமையும் விட்டுவைக்காத மோடி!

நேப்பிடா: ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வரும் பிரதமர் மோடி, தற்போது இன்ஸ்ட்டாகிராம் என்ற புதிய சமூக தளத்திலும் இணைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையத் தளங்கள் மூலமாக, மத்திய அரசின் திட்டங்கள், நாட்டின் அன்றாட நடப்பு பற்றிய கருத்துக்கள் போன்றவற்றை உடனுக்குடன் வெளிப்படுத்தி வருகிறார். மேலும், முக்கிய நிகழ்வுகள், சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து வருகிறார்.

 இன்ஸ்ட்டாகிராமையும் விட்டுவைக்காத  மோடி!

மேலும், மத்திய அமைச்சர்களையும் இதேபோல் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மூலமாக மக்களுடன் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், புதிய இன்னொரு சமூக வலைத்தளமான இன்ஸ்ட்டாகிராமில் பிரதமர் மோடி இணைந்துள்ளார். ஆசியான் மாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மர் நாட்டு தலைநகரான நேப்பிடாவுக்கு சென்றுள்ள மோடி, அங்கிருந்து தனது புகைப்படத்தை இன்ஸ்ட்டாகிராம் இணையதளத்தில் முதலாவதாக பதிவேற்றம் செய்துள்ளார்.

இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுமார் அரை மணி நேரத்தில், பிரதமர் மோடியின் இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அபிமானிகள் இணைந்துள்ளனர்.