Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

 'நான் ஆட்சிக்கு வந்த உடனேயே திருடர்கள் எல்லாம் தமிழகத்தைவிட்டு வெளிமாநிலங்களுக்கு ஓடிவிட்டார்கள்’ - தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற சமயம் ஜெயலலிதா பூரிப்புடன் இப்படி அறிவித்தார். ஆனால், நாட்டின் நிலவரத்தைப் பார்த்தால், வெளிமாநிலங்களில் இருந்தெல்லாம் கொள்ளை மற்றும்

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலைகாரர்கள் ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்குத் 'தொழில்’ செய்ய வந்துவிட்டார்களோ என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்குக் கொலைக்களமாகி இருக்கிறது தமிழகம்!

ரியல் எஸ்டேட் பிரச்னையால் கொலை, வியாபாரப் போட்டியால் கொலை, ரவுடிகள் இடையே  மோதல் காரணமாக கொலை, கொலைக்குப் பழிவாங்கக் கொலை, உள்கட்சி அரசியலால் கொலை... என கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட கொலைகள் அரங்கேறியிருக்கின்றன. இதில் ஊடக வெளிச்ச வெள்ளம் பொழிந்த தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயத்தைக் கொலை செய்த குற்றவாளிகள் யார் என்பதைக்கூட காவல் துறையால் இன்னும் கண்டுபிடிக்க முடியாத நிலை!

இந்தச் சூழ்நிலையில் சமீபத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நான்கு பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதிலும் கடந்த வாரம் வெட்டிக் கொல்லப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ரமேஷின் கொலை, கொங்கு மண்டலத்தில் பதற்றத்தை விதைத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் இப்படியான சூழல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டலத்தை இப்போது மீண்டும் அச்ச மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. தென்னிந்தியாவின் தொழில் தலைநகரத்தில் இப்படி ஒரு பதற்றம் நிலவுவது, 'ஓராண்டில் நூறாண்டு சாதனை’களையும், 'சரித்திரம் பேசும் ஈராண்டு சாதனை’களையும் படைத்த அரசின் நிர்வாகத் திறனுக்குச் சவால் விடும் நிலவரம்.

ரமேஷின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடிக்க முதல்வர் ஜெயலலிதா சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளதைத் தெரிவிக்கும் அதே அறிவிப்பில், 'காவல் துறைக்கு எந்தவிதமான இறுக்கங்களையோ இடர்பாடுகளையோ யாரும் தருவதில்லை. அவர்கள் தங்கள் கடமையைச் செய்யும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது!’ என்றும் கூறியுள்ளார்.

முதல்வரின் அந்தக் கூற்று உண்மையே என்பதை, சமீப கொலைச் சம்பவங்களின் சூத்ரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தும், இப்படியான கொலைகள் மேலும் நடைபெறாமல் கடிவாளம் இடும் நடைமுறைகள் மட்டுமே நிரூபிக்கும்!