Published:Updated:

கல்வித் துறை ஒழுங்குமுறை அமைப்புகள் மறு ஆய்வு: அமைச்சர் ஸ்மிருதி இரானி!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: உயர் கல்வித் துறை ஒழுங்குமுறை அமைப்புகள் மறு ஆய்வு செய்யப்படுகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

இது தொடர்பாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ''உயர் கல்வித் துறையில் உள்ள பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருகிறோம்.

கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வரவும், நாட்டில் கல்விக்கான செயல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் இந்த மறு ஆய்வு அவசியமாகும். கல்வித் துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்" என்றார்.