Published:Updated:

நேரு நினைவிடத்தில் குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

விகடன் விமர்சனக்குழு
நேரு நினைவிடத்தில் குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!
நேரு நினைவிடத்தில் குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!
நேரு நினைவிடத்தில் குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

புதுடெல்லி: ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடிரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேருவின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

நேருவின் பிறந்த தினம் ஆண்டு தோறும் குழ்ந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி தீன் மூர்த்தி பவனில் இன்று மலை இதற்கான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சாதனை குழந்தைகளுக்கு விருதுகளை வழங்க உள்ளார்.