Published:Updated:

பணி நியமனத்தில் முன்னுரிமை: தமிழக அரசு பயிற்சி செவிலியர்கள் மனு தள்ளுபடி!

பணி நியமனத்தில் முன்னுரிமை: தமிழக அரசு பயிற்சி செவிலியர்கள் மனு தள்ளுபடி!
பணி நியமனத்தில் முன்னுரிமை: தமிழக அரசு பயிற்சி செவிலியர்கள் மனு தள்ளுபடி!
பணி நியமனத்தில் முன்னுரிமை: தமிழக அரசு பயிற்சி செவிலியர்கள் மனு தள்ளுபடி!

புதுடெல்லி: பணி நியமனம் குறித்த தமிழக அரசு பயிற்சி கல்லூரி செவிலியர்களின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் அரசு செவிலியர் பயிற்சி கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு பணி வழங்கப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த நடைமுறையை முதல்வர் ஜெயலலிதா மாற்றினார். தனியார் பயிற்சி கல்லூரியில் படித்த செவிலியர்களுக்கும் அரசு மருத்துவமனையில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கடந்த ஆண்டு அறிவித்தார். இதை எதிர்த்து அரசு செவிலியர் கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதனிடையே, பணியிடங்கள் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கல்லூரி செவிலியர்களுக்கு பணி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை எதிர்த்து அரசு பயிற்சி செவிலியர் கல்லூரி மாணவிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "அரசு பயிற்சி செவிலியர் கல்லூரியில் படிப்பவர்களுக்கே பணி நியமனத்தில் முன்னுரிமை தர வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணை செல்லும் என தீர்ப்பளித்ததோடு,  அரசு பயிற்சி செவிலியர் கல்லூரி மாணவிகளின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு பயிற்சி செவிலியர் கல்லூரி மாணவிகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தது.