Published:Updated:

பாடப் புத்தகத்தில் பாலியல் விழிப்புணர்வு கல்வி: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

பாடப் புத்தகத்தில் பாலியல் விழிப்புணர்வு கல்வி: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!
பாடப் புத்தகத்தில் பாலியல் விழிப்புணர்வு கல்வி: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!
பாடப் புத்தகத்தில் பாலியல் விழிப்புணர்வு கல்வி: பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவு!

சென்னை : பாலியல் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப்   பள்ளிகளில் நடத்துவது தொடர்பாக அரசு பரிசீலிக்க  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இது தொடர்பாக, வழக்கறிஞர்  டி.சித்ராதேவி சென்னை உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்,  மத்திய அரசு கடந்த 2007ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில்  53 விழுக்காடு பள்ளிக் குழந்தைகள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்  என்று தெரியவந்துள்ளது.

மேலும் பெண் குழந்தைகள் பள்ளி, வீடு மற்றும் தெருக்களில் பல்வேறு விதமான பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்தக்  கொடுமையில் குழந்தைகள் சிக்காமல் இருக்க, பள்ளி பாடங்களில் பாலியல் கொடுமை தொடர்பான விவரங்கள், பாடங்கள், சித்திரங்கள் ஆகியவற்றைச்  சேர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து பரிந்துரைத்து  வருகின்றனர்.

ஆனால், இந்த பரிந்துரைகளைத்  தமிழக அரசு இதுவரை அமல்படுத்தாமல் உள்ளது. மேலும், பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் கொடுமை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப்  பள்ளிக்கூடங்களில் நடத்த வேண்டும் என்றும் பள்ளிப் பாடங்களில் பாலியல் கொடுமை தொடர்பான பாடங்களை சேர்க்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த  நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு, மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்துக்குள் பரிசீலக்கும்படி தமிழகப்  பள்ளிக்கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.