Published:Updated:

முகநூல்: கருணாநிதியின் மு.க. நூல்

முகநூல்: கருணாநிதியின் மு.க. நூல்
முகநூல்: கருணாநிதியின் மு.க. நூல்

மிழக அரசியலில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அளவுக்கு நவீன காலத்துடன் தன்னை பொருத்திக் கொண்டு இயங்கும் அரசியல்வாதிகள் வேறு யாரும் இருக்கிறார்களா என்றால் விடை பூஜ்ஜியம்தான்.

இந்த முதிய வயதிலும் கருணாநிதி ஃபேஸ்புக்கில் அதி தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். தினம் இரண்டு ஸ்டேட்டஸ், அவ்வப்போது பொன்மொழிகள், அசத்தலான புகைப்படங்கள் என்று கருணாநிதியின் முகநூல் பக்கம் எப்போதும் இளசுகளுக்கு இணையாக லைக்ஸ் அள்ளுகிறது.

முகநூல்: கருணாநிதியின் மு.க. நூல்

ஆகஸ்ட் 12, 2012 அன்றுதான் கருணாநிதி முகநூலில் இணைந்தார். இப்போது அவரது முகநூல் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 2,84,924. நாள்தோறும் இந்த எண்ணிக்கை பெருகியபடியே இருக்கிறது. இதில் கணிசமானவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நவீன தலைமுறையில் எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள சமூக ஊடகங்களை விட சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை. இதை தமிழ்நாட்டில் சரியாக புரிந்துகொண்டிருக்கும் கருணாநிதி மிகுந்த உற்சாகத்துடன் இதில் ஈடுபட்டு வருகிறார். அவரது முகநூல் பக்கத்தை நிர்வகிக்க தனிப்பட்ட நபர்கள் இருக்கிறார்கள் என்றபோதிலும், அவரது விருப்பத்தினாலான தகவல்களே அதில் இடம்பெறுகின்றன. இதைக்கூட மற்ற தலைவர்கள் செய்வது இல்லை என்பதில் இருந்தே இவர் எந்த அளவுக்கு முன் நிற்கிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

அன்றாடம் பத்திரிக்கைகள் மற்ற மீடியாக்களில் தவறாது அவரது அறிக்கை செய்திகள் இடம்பெற்றாலும் மறக்காது தனது முகநூலிலும் அதை பதிவிடுகிறார்.

முகநூல்: கருணாநிதியின் மு.க. நூல்

தமிழக அரசியல் என்பது கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி. ஆர்- கருணாநிதி முரண்களின் எதிர்வினையாகவே இயங்கிவருகிறது என்பது அரசியல் தெரிந்த அனைவரும் அறிந்தது. ஆனால் முத்தாய்ப்பாக எம்.ஜி. ஆரின் பிறந்தநாளுக்கு அவருடன் இருக்கும் படத்தை பதிவிட்டு அரிய புகைப்படம் எனக் குறிப்பு எழுதுகிறார் அதன் கீழே.

முகநூல்: கருணாநிதியின் மு.க. நூல்

இது காலம் செய்த மாயமா, கருணாநிதி அடைந்த பக்குவமா என்பது அவருக்கு மட்டும தெரிந்த “அரிய உண்மை“.  இருப்பினும் முக நூலில் இந்த ஆரோக்கியத்தை காணும் இப்போதைய தலைமுறை வழமையான எம்.ஜி. ஆர் கருணாநிதி அரசியலிலிருந்து வெளிவருவார்கள் என்பது நிஜம்.

முகநூல்: கருணாநிதியின் மு.க. நூல்

மேலும், கருணாநிதியின் முகநூல் பக்கத்தில் அவரை பாராட்டுவோரை விட திட்டிக் குவிப்போரின் எண்ணிக்கைதான் அதிகம். மிகவும் இழிவாக, வசைபாடும் பின்னூட்டங்கள் அவரது ஒவ்வொரு நிலைத்தகவலின் கீழும் குவிந்து கிடக்கின்றன.

அவற்றை பொருட்படுத்துகிறாரா, புறம் தள்ளுகிறாரா என்பது ஒரு பக்கம் இருக்க... அத்தகைய வசைகளை எதிர்கொள்கிறார் என்பதுதான் முக்கியமானது.

சமீபத்தில் சச்சின் டெண்டுகர் எழுதிய சுயசரிதை நூலான 'Playing It My Way புத்தகத்தை ஆர்வத்துடன் வாசித்துக் கொண்டிருப்பதாக புகைப்படத்துடன் முகநூலில் ஸ்டேட்டஸ் வெளியிட்டார் கலைஞர். இந்த சுறுசுறுப்பு இளைஞர்களுக்கே இல்லாதது.

- நா.சிபிச்சக்கரவர்த்தி