Published:Updated:

மதிப்பெண் சான்றிதழை திருத்தியதாக நிரூபித்தால் ராஜினாமா: மத்திய அமைச்சர் சவால்!

விகடன் விமர்சனக்குழு
மதிப்பெண் சான்றிதழை திருத்தியதாக நிரூபித்தால் ராஜினாமா: மத்திய அமைச்சர் சவால்!
மதிப்பெண் சான்றிதழை திருத்தியதாக நிரூபித்தால் ராஜினாமா: மத்திய அமைச்சர் சவால்!
மதிப்பெண் சான்றிதழை திருத்தியதாக நிரூபித்தால் ராஜினாமா: மத்திய அமைச்சர் சவால்!

புதுடெல்லி: கல்வி சான்றிதழை திருத்தியதாக கூறப்படும் வழக்கில் என் மீதான புகாரை நிரூபித்தால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் கத்தேரியா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த 9 ஆம் தேதி விரிவு படுத்தியபோது, மனித வள மேம்பாட்டுத் துறை ராஜாங்க அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார் பேராசிரியர் ராம்சங்கர் கத்தேரியா. இவர், தனது கல்வி சான்றிதழை திருத்தி ஆக்ரா பல்கலைக் கழகத்தில் பணியில் சேர்ந்ததாக வழக்கு உள்ளது.

ஆக்ரா தொகுதி எம்.பி.யான கத்தேரியா கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன் மீது 21 வழக்குகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதில், மதிப்பெண் சான்றிதழை திருத்தியதாக கூறப்படும் வழக்கும் ஒன்றாகும்.

கத்தேரியா தனது இளம் கலை 2 ஆம் ஆண்டு மதிப்பெண் சான்றிதழில் இந்தி இலக்கியத்தில் 43 மதிப்பெண்களும், ஆங்கில பாடத்தில் 42 மதிப்பெண்களும் பெற்றிருந்ததாகவும், அதை அப்படியே இந்தி இலக்கியத்தில் 53 எனவும், ஆங்கில பாட மதிப்பெண்ணை 52 ஆக திருத்தியதாகவும் கூறப்படுகிறது. இதேபோல், முதுகலை 2-ம் ஆண்டு இலக்கிய எழுத்துகளின் கொள்கைகள் என்ற பாடத்தில் பெற்ற 38 மதிப்பெண்களை சான்றிதழில் 72 ஆக அவர் திருத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து அவர் கூறும்போது, ''இது, 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட்டு என்னிடம் தோல்வி கண்ட பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் தொடர்ந்த வழக்கு. அரசியல் பழி தீர்ப்பதற்காக அவர், என் மீது இந்த வழக்கை தொடர்ந்தார்.

இது தொடர்பாக மாயாவதி தலைமையிலான உத்தரபிரதேச அரசு விசாரணையும் நடத்தியது. அதில், என் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. என் மீதான இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் அல்ல, எம்.பி. பதவியையும் நான் ராஜினாமா செய்வேன்" என்று கூறியுள்ளார்.