Published:Updated:

தமிழக முதல்வர் யாரென்று ஓ.பி.எஸ்.சுக்கே தெரியவில்லை: ஸ்டாலின் கிண்டல்

விகடன் விமர்சனக்குழு
தமிழக முதல்வர் யாரென்று ஓ.பி.எஸ்.சுக்கே தெரியவில்லை: ஸ்டாலின் கிண்டல்
தமிழக முதல்வர் யாரென்று ஓ.பி.எஸ்.சுக்கே தெரியவில்லை: ஸ்டாலின் கிண்டல்

மதுரை: தமிழக முதல்வர் யாரென்று முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கே தெரியவில்லை என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக முதல்வர் யாரென்று ஓ.பி.எஸ்.சுக்கே தெரியவில்லை: ஸ்டாலின் கிண்டல்

ராமநாதபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு நேற்றிரவு மதுரை சங்கம் ஓட்டலில் தங்கிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சென்னை செல்வதற்கு முன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க நிர்வாகி மூவேந்திரனை சந்தித்து நலம் விசாரித்தார்.

அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "மீனவர்கள் விடுதலைக்கு
பாடுபட்ட பிரதமர் மோடிக்கு நன்றி சொல்கிறோம். இனி இது போன்ற பிரச்னைகள் மீனவர்களுக்கு வராதவாறு நிரந்தர தீர்வை மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்றார்.

பின்னர் தமிழக முதல்வரின் செயல்பாடு எப்படியுள்ளது என்று கேட்டதற்கு, "தமிழக முதல்வர் யாரென்று முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கே தெரியவில்லை என்று சமீபத்தில் ப.சிதம்பரம் கூறினார். அதையேதான் நானும் கூறுகிறேன்" என்றார் சிரித்துக்கொண்டே.

-செ.சல்மான்

படம்: ஈ.ஜெ.நந்தகுமார்