Published:Updated:

பரப்பன அக்ரஹாரா சிறையில் விபசாரம்: பெண் கைதிகள் குமுறல்!

விகடன் விமர்சனக்குழு
பரப்பன அக்ரஹாரா சிறையில் விபசாரம்: பெண் கைதிகள் குமுறல்!
பரப்பன அக்ரஹாரா சிறையில் விபசாரம்: பெண் கைதிகள் குமுறல்!

பெங்களூரு:  கர்நாடக மாநில பரப்பன அக்ரஹாரா   மத்திய  சிறைச்சாலையில் ஆண் கைதிகளுடன் விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக பெண் கைதிகள் புகார் கடிதம் எழுதி உள்ளது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பரப்பன அக்ரஹாரா சிறையில் விபசாரம்: பெண் கைதிகள் குமுறல்!

பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா   சிறையில் பெண் குற்றவாளிகளும் ஆண் குற்றவாளிகளும்  அடைக்கப்பட்டுள்ளனர். இந்தப்  பெண் கைதிகளிடம்  கட்டாயப்படுத்தி ஆண் சிறைக் காவலர்கள்  செக்ஸ் வைத்து கொள்வதாகவும், ஆண் கைதிகளுக்கு, ரூ.300 முதல் 500 வரை சிறைக் காவலர்கள் வசூலிப்பதாகவும்  குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த தகவலைப்  பெண் குற்றவாளிகள் ஒரு குழுவாக சேர்ந்து புகார்  கடிதம்  எழுதி கையெழுத்திட்டு, சிறை வளாகத்தில் உள்ள கைதிகள்  குறைதீர்க்கும் பெட்டியில் போட்டு உள்ளனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி சிறைத்துறை டி.ஐ.ஜி. ககன்தீப் சிங் அளித்த அறிக்கையின் படி,  கடுங்காவல் சிறைத்தண்டனை பெற்ற 15 பெண்கள் கைதிகள், சாதாரண சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 3 பெண் கைதிகளும் உள்ளனர்.

அதே போல, விசாரணைக் கைதிகளாக 89 பெண்களும், இளம் குற்றவாளிகளாக (19-23 வயதிற்குள்) 4 பெண்களும், போதைக்கடத்தல்  குற்றங்களுக்காக 8 பெண்களும், 12 வெளிநாட்டுப்  பெண் கைதிகளும் என மொத்தம்  131 பெண்கள் பரப்பன அக்ரஹாரா  சிறைச்சாலையில் கைதிகளாக உள்ளனர்.

இவர்கள் அனைவரும் சேர்ந்து, சிறைக்குள் நடக்கும் செக்ஸ் கொடுமைகள் குறித்து, பெண் கைதிகள் கர்நாடக தலைமை நீதிபதிக்குக்  கடிதம் எழுதி உள்ளனர். குறை தீர்க்கும் பெட்டியில் இருந்து இவ்வாறு 2 கடிதங்களை நீதிபதிகள் எடுத்து உள்ளனர். அந்த  கடிதங்கள் மற்றும் பிரதிகள் விரைவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. அதில் கர்நாடகா தலைமை நீதிபதியின் முகவரி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் அவர் தலையிட்டு  பெண் கைதிகளைக்  கொடுமையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு கடிதத்தில் ஆண் கைதிகளிடம்  லஞ்சம் பெறும் சிறைக்காவலர்கள் மற்றும் சிறை அதிகாரிகளின் பெயர்கள் கொண்ட பட்டியலும்  இடம்பெற்று உள்ளது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அந்த கடிதங்களை கர்நாடக ஐகோர்ட் பரப்பன அக்ரஹாரா சிறைசாலைக்கு அனுப்பி வைத்து உள்ளது. இதனால் சிறைத்துறை அதிகாரிகள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் விபசாரம்: பெண் கைதிகள் குமுறல்!

பெண் கைதிகள் கன்னட மொழியில் எழுதிய  உள்ள அந்தக்  கடிதத்தில், "பெண் கைதிகளிடம் இருந்து எல்லாமும் அபகரிக்கப்படுகின்றன. கைதிகளின்  உறவினர்கள் முறைப்படி சந்திக்க வந்தாலும் அவர்களிடம் இருந்து ரூ.200 முதல் ரூ.300 வரை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், அதிகாரிகளைப்  பணம் இல்லாமல் பார்க்க  முடியாத சூழ்நிலை உள்ளது. நாங்கள் கொடுக்க முடியாது என்றால் அவர்கள் எங்களைப்  பார்த்து, நாய்போல் கத்தி அவமானப்படுத்துவார்கள். எங்கள் உறவினர்களை பார்க்கவும்  அனுமதிப்பது இல்லை.

மேலும் உறவினர்கள் கொண்டுவரும் பொருட்களில் சரிபாதி சிறைக்காவலர்களுக்குக் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் அவர்கள் அதை எல்லாம் வெளியே தூக்கி வீசி விடுவார்கள். சிறைக்காவலர்கள்   பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். அவர்கள், நீங்கள் சிறையில் இருக்கிறீர்கள் நல்ல உணவு,  அழகாக உடை உடுத்துவது என எதிர்பார்க்க கூடாது என கூறுகின்றனர்.

எல்லாத்தையும் நீங்கள் அனுபவிப்பது என்றால், உங்கள் தண்டனைக்கு என்ன  பொருள்  என அதிகாரிகள் கூறுகின்றனர். மூத்த அதிகாரியிடம் குறைகளை கூறினால்,  உங்கள் குறைகளைக்  கேட்க நான்  இங்கு வரவில்லை என கூறுகிறார்.

சிறைக்காவலர்கள்  2 சிறைக்கைதிகளுக்கு சட்டவிரோதமாக மொபைல் போன் வைத்திருக்க அனுமதித்து உள்ளனர். ஒருவர் கணவனைக்  கொலை செய்த மனைவி, மற்றொருவர்  ஆங்கிலம் பேசும் கைதி. மற்ற கைதிகள் மொபைல் போன் கேட்டால் அதிகாரிகளூக்கு  பணம் கொடுக்க வேண்டும் என்று  கூறுகிறார்கள்.  பணம் இருந்தால் அனைத்தும் அனுபவிக்க முடியும் என கூறுகின்றனர். இதை உயரதிகாரிகளிடம் தெரிவித்தால் அவர்கள் பரோலில் செல்லும் வாய்ப்பை கெடுத்துவிடுவதாகக்  கூறுகிறார்கள்.

பெண் கைதிகள் சிறைக்காவலர்களின்  தொல்லைகளில் இருந்து விடுதலை பெற்று அமைதியான முறையில் சிறைத்தண்டனையை முடிக்க  வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும், பெண் குற்றவாளிகள், பிரபல பெண் தாதா  பத்மாவதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டு உள்ளனர். பத்மாவதி சிறைக்கைதி ஜோதியை அடித்து உள்ளார். அவரது கையை பிளேடால் கீறி உள்ளார். ஆனால் இதுவரை பத்மாவதி மீது எந்த நடவடிகையும்  கொடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக பத்மாவதி இடமாற்றம் செய்யப்படவேண்டும் என்றும்  கோரிக்கை வைத்து உள்ளனர். 

இந்நிலையில், இந்த புகார் கடிதம் குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி. பி.எம் ஜெய்சிம்மாவிடம்  கேட்டபோது  இந்த குற்றசாட்டுகளை மறுத்தார். நான் கூட பெண்கள் சிறைப்பகுதிக்கு செல்வதில்லை என்று கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது சிறையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சிறைக்குள்ளேயே பெண் கைதிகளை வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபட சிறைத்துறை காவலர்களே உடந்தையாக இருந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும, அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.