Published:Updated:

பாம்பாற்றின் குறுக்கே அணை: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வைகோ கோரிக்கை!

விகடன் விமர்சனக்குழு
பாம்பாற்றின் குறுக்கே அணை: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வைகோ கோரிக்கை!
பாம்பாற்றின் குறுக்கே அணை: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வைகோ கோரிக்கை!
பாம்பாற்றின் குறுக்கே அணை: தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வைகோ கோரிக்கை!

கோவை: பாம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டுவதால், அமராவதி பாசன பகுதிக்கு ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை, திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து இன்று (15ஆம் தேதி) துவங்கினார்.

பிரச்சாரத்துக்கு முன்னதாக அமராவதி அணை அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ''அணை கட்டப்பட்டால் 70 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களும், 46 குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்படும். ஏற்கனவே கடந்த 2012ல் பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்ட முயன்ற போது, தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டு, தற்போது அந்த பணியை மீண்டும் துவங்கி இருக்கிறது.

காவிரி நதிநீர் ஆணைய தீர்ப்பு படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பு படியும் புதிய பாசன திட்டங்களும், புதிய நீர்மின் திட்டங்களும் அமைக்கக் கூடாது என்ற நிலையில், விதிமுறைகளை மீறி அணை கட்டப்பட இருக்கிறது. இதில் தேக்கப்படும் நீர் கோககோலா நிறுவனத்துக்கு கொடுக்க திட்டமிட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது. 75 அடி உயரத்திலும், 445 அடி அகலத்திலும் அணை அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, கேரளா அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும், அணை கட்டுவதற்கு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அனுமதி கொடுக்க கூடாது. தமிழகத்தை சுற்றியுள்ள அனைத்து மாநிலங்களும் தண்ணீர் பிரச்னையில் தமிழகத்தை வஞ்சித்து வரும், நிலையில் மத்திய அரசு அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தால் இந்தியாவின் ஓருமைபாடு என்பது தொலைந்துபோகும். தமிழக அரசு முல்லை பெரியாறு விவகாரத்துல் நல்ல நடவடிக்கை எடுத்ததுபோல பாம்பாறு பிரச்னையிலும் உடனடியாக உச்சநீதிமன்றத்தை நாடி, அணை கட்டும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்த வேண்டும்.

சட்டரீதியான போராட்டம் ஓரு புறம் இருந்தாலும், அறவழி போராட்டத்தை துவங்கி இருக்கிறோம். அடுத்த போராட்டம் சாதாரண போராட்டமாக கண்டிப்பாக இருக்காது. எந்த மாதிரியான போராட்டம் என்பதை பின்பு அறிவிப்போம்'' என்றார்.

இதனைத்தொடர்ந்து வாகனத்தில் அமராவதி அணை அமைந்துள்ள அமராவதி நகரில் பிரசாரத்தை துவங்கிய வைகோ, அமராவதி அணையை பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து கல்லாபுரம், எலையமுத்தூர் உள்ளிட்ட திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள அமராவதி பாசன பகுதிகளில் வாகன பிரசாரம் மேற்கொள்ளும் வைகோ, கரூர் மாவட்டம், சின்னதாரபுரம் பகுதியில் இன்று மாலை பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

ச.ஜெ.ரவி