Published:Updated:

சிதம்பரத்தின் கோரிக்கை முட்டாள் தனமானது: சுப்பிரமணியசாமி

சிதம்பரத்தின் கோரிக்கை முட்டாள் தனமானது: சுப்பிரமணியசாமி
சிதம்பரத்தின் கோரிக்கை முட்டாள் தனமானது: சுப்பிரமணியசாமி
சிதம்பரத்தின் கோரிக்கை முட்டாள் தனமானது: சுப்பிரமணியசாமி

புதுடெல்லி: ராணுவ படையின் சிறப்பு அதிகார சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்ற சிதம்பரத்தின் கோரிக்கை முட்டாள்தனமானது என பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ''வரும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே ராணுவ படையின் சிறப்பு அதிகார சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விடுத்துள்ள கோரிக்கை முன்னாள்தனமானது.

அவ்வாறு செய்தால், அது தீவிரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் சாதகமாக அமைந்து விடும். நாங்கள் ராணுவத்தை பலப்படுத்தவே முயற்சித்து வருகிறோம். ராணுவ அதிகார சட்டத்தை நீர்த்து போக விடமாட்டோம். அதை ஒடுக்க நீங்கள் சக்தியை பயன்படுத்தினால், நாங்கள் 10 மடங்கு சக்தி கொண்டு அதனை ஒடுக்குவோம்'' எனக் கூறியுள்ளார்.