Published:Updated:

ஜெ. வழக்கு மூலம் எப்படியெல்லாம் வாய்தா வாங்கலாம் என தெரிந்து கொண்டேன்: ஆச்சார்யா

விகடன் விமர்சனக்குழு

பெங்களூரு: ஒரு வழக்கில் எப்படியெல்லாம் வாய்தா வாங்க முடியும் என்பதை ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மூலம் தெரிந்து கொண்டேன் என வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர்களில் ஒருவர் ஆச்சாரியா. இவர் பல்வேறு நெருக்கடிகளை சுட்டிக்காட்டி அந்த வழக்கில் இருந்து தாமாகவே வெளியேறினார்.

இந்நிலையில் வழக்கறிஞர் ஆச்சாரியா 'ஆல் பிரம் மெமரி' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில், ''ஜெயலலிதா வழக்கில் ஆஜராகும்போது பல்வேறு பிரச்னைகளை நான் சந்தித்து இருக்கிறேன். பல மிரட்டல்கள் எனக்கு வந்தது. கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க. மூலமும் எனக்கு நெருக்கடிகள் வந்துள்ளன.

மேலும், ஜெயலலிதா வழக்கில் ஆஜராகும்போது எனக்கு பல்வேறு அனுபவங்கள் கிடைத்தன. ஒரு வழக்கில் எப்படியெல்லாம் வாய்தா வாங்க முடியும் என்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஒத்திவைப்பு சட்டம் என்ற பெயரில் வாய்தா குறித்து ஒரு புத்தகமே வெளியிடலாம். அவ்வாறு வெளியிட்டால், பல குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டு விடும்'' எனக் கூறியுள்ளார்.