Published:Updated:

ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் விநோத பூஜை!

விகடன் விமர்சனக்குழு
ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் விநோத பூஜை!
ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் விநோத பூஜை!

புதுக்கோட்டை: ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் 207 படிகளில் பூஜை செய்து பிரார்த்தனை செய்துள்ளார்.

பூஜை செய்வதில் அ.தி.மு.க.வினரை மிஞ்ச ஆளே இல்லை என்கிற அளவிற்கு போய் விட்டது. மண்டியிட்டு பிரார்த்தனை, மடியேந்தி பிரார்த்தனை என்பன தொடங்கி, இப்போது 207 படிகளில் பூஜை செய்து பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் விநோத பூஜை!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி அனைத்து அமைச்சர்களும் வெவ்வேறு பிரார்த்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான டாக்டர் விஜயபாஸ்கர் இன்று (15ஆம தேதி) காலை விராலிமலை முருகன் கோவிலில் இருக்கும் 207 படிகளிலும் சிறப்பு பூஜை, செய்து தேங்காய் உடைத்து, முருகன் கோவிலுக்கு அபிஷேகம் செய்திருக்கிறார்.

ஜெயலலிதா இன்னும் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது என அரசிதழில் வெளியிட்டு அரசின் நடவடிக்கை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் பூஜைகளும் நடந்து கொண்டிருக்கிறது.

வீ.மாணிக்கவாசகம்