Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்

'பன்னிரண்டு ரூபாய் இருந்தாலே, மும்பையில் நல்ல சாப்பாடு சாப்பிடலாம்!’, 'ஐந்து ரூபாய்க்கு டெல்லியில் நல்ல சாப்பாடு கிடைக்கிறது!’, 'ஒரு ரூபாய் இருந்தாலே பசியாற முடியும்!’ - இந்தியர்களை முட்டாள்களாகவும் ஏமாளிகளாகவும் நினைத்து, இப்படி எல்லாம் பிதற்றும் காங்கிரஸ் அரசாங்கம், சில வாரங்களுக்கு முன், 'நாட்டு மக்களின் பசியைப் போக்க, கோடானகோடி மக்கள் பயன் அடையும் வகையில், 'இதோ வந்துவிட்டது புத்தம் புதிய அல்ட்ரா ஆல் நியூ உணவுப் பாதுகாப்புச் சட்டம்’ என்று  ஏகபோகமாக விளம்பரம் செய்தது.

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி இந்திய மக்கள்தொகையில் சுமார் 67 சதவிகிதத்துக்கு மேலானவர்களின் பசியைப் போக்கஇருப்பதாக காங்கிரஸ் அரசாங்கம் சொன்ன சில நாட்களிலேயே, 'பொருளாதார மேதை மன்மோகன் சிங்கின் ஆட்சியில் வறுமை குறைந்துவிட்டது. இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 21.9 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது’ என்று சம்மனே இல்லாமல் ஆஜராகிறது திட்ட கமிஷன். 'நகர்ப்புறத்தில் 33 ரூபாய்க்கும் கிராமப்புறங்களில் 27 ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் ஒருவர், வறுமைக்கோட்டுக்கு மேலே இருக்கிறார்’ என்று அபார புள்ளிவிவரங்களை அளித்த திட்ட கமிஷன், 'மன்மோகன் சிங்கின் பொருளாதாரப் பரிபாலனையில்... வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து  வருகிறது’ என்று பெருமிதத்துடன் தெரிவித்திருக்கிறது. இப்படி அரசாங்கத்தின் 'திட்டப்படி’ செயல்படும் திட்ட கமிஷனின் வார்த்தைகளை என்னவென்று திட்டுவது?

நாட்டில் வறுமை குறைந்திருக்கிறதா என்பதைப் புள்ளிவிவரங்களைப் படித்தோ அல்லது பொருளாதார மேதைகளின் பொழிப்புரைகளைக் கேட்டோ, தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இங்கு இல்லை. ஆம்.... கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

உலகுக்கே உணவு அளிக்கும் உழவர்களில் லட்சம் பேர், ஒருவேளை பசியாற வழியின்றி தற்கொலை செய்துகொள்ளும் இந்தியாவின் தலைப்புச் செய்திகளை... காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கவனிப்பதே இல்லையா?  

அரிசி, பருப்பு, எரிபொருள்களின் விலை பட்ஜெட்டிலேயே பள்ளம் பறித்து நடுத்தர மக்களையும் சேர்த்து வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளிவிட்ட நிலையில், 'வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்த பல கோடி பேர் அதற்கு மேலே வந்துவிட்டார்கள்!’ என்று அறிவிக்க எவ்வளவு அசட்டுத் துணிச்சல் வேண்டும்? வாய்க்கரிசி போட நினைக்கும் ஆள்வோருக்கு... நாளை வாக்கு அரிசி போடும்போதுதான் தெரியும், வயிறு பசித்தவனின் வலி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism