Published:Updated:

இங்கிட்டு கதர்... அங்கிட்டு காவி

கறுப்பு எம்.ஜி.ஆர். குஷி!ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

இங்கிட்டு கதர்... அங்கிட்டு காவி

கறுப்பு எம்.ஜி.ஆர். குஷி!ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
இங்கிட்டு கதர்... அங்கிட்டு காவி

விஜயகாந்த் வேல்யூ எகிற ஆரம்பித்துவிட்டது!

உள்ளூர் அரசியலில் அவர் அதிகக் கவனம் இல்லாமல் நடந்துகொள்ளலாம், சட்டசபைக்குச் சென்று வாதங்களில் ஈடுபடாமல் இருக்கலாம், சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களை வைத்துக் காப்பாற்றும் பக்குவம்கூட இல்லாமல் இருக்கலாம், நாட்டில் நடக்கும் எத்தனையோ பிரச்னைக்குஎந்தக் கருத்தும் சொல்லாமல், எந்தப் போராட்டமும் நடத்தா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
மல் இருக்கலாம், அவரை சொந்தக் கட்சி நிர்வாகிகளே பார்க்க முடியாமல் இருக்கலாம். ஆனாலும் அப்படிப்பட்டவரை இன்று காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாவும் எப்படியாவது தங்களது அணிக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதற்காக தனித்தனியாக உழைக்கின் றன; தவி தவிக்கின்றன; துடி துடிக்கின்றன!

இன்றைய சூழ்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கு கஷ்டதிசை. கருணாநிதியுடன் பிரிக்க முடியாத நிலைமையில் கைகோத்து நின்று வெற்றி பெறும் கூட்டணியை உருவாக்குவதற்கு, காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் நினைத்தது. ஈழத் தமிழர் விவகாரத்தில் காங்கிரஸுடன் ஐக்கியமாகி நிற்பது தனக்கு அரசியல்ரீதியாகப் பின்னடைவை உருவாக்கும் என்று கருணாநிதி நினைக்கிறார். எனவே, அவர் இரண்டுவிதமான ஃபார்முலாவை வைத்துள்ளதாக தி.மு.க. வட்டாரம் சொல்கிறது. விஜயகாந்தை மட்டும் தன்னோடு இணைத்துக்கொண்டு உதிரிக் கட்சிகளின் துணையோடு தேர்தலைச் சந்திப்பது ஒன்று. அல்லது காங்கிரஸ், விஜயகாந்த் ஆகியவற்றை இணைத்து மெகா கூட்டணியை அமைப்பது என்பது இரண்டாவது. 'முடிந்த அளவுக்கு காங்கிரஸைத் தவிர்க்க நினைக்கிறார் தலைவர்’ என்கிறார்கள் தி.மு.க-வில். எனவே, காங்கிரஸ் கட்சி, கருணாநிதியை நம்பாமல் சில காய் நகர்த்தல்களைச் செய்துவருகிறது. அவர்களுடைய முதல் பார்வை... விஜயகாந்த் மீது!

இங்கிட்டு கதர்... அங்கிட்டு காவி

மாநிலங்களவைத் தேர்தலின்போதே தே.மு. தி.க. வேட்பாளரை ஆதரிக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்தது. இதற்கான முயற்சியில் விஜயகாந்துக்கும் காங்கிரஸ் மேலிடத்துக்கும் பாலமாக ஆந்திர நடிகர் ஒருவர் இறங்கியதாக அப் போதே செய்தி பரவியது. சோனியா வின் ஆலோசகர் அகமது படேல் வரை விஜயகாந்த் நட்பு அப்போது நீண்டது. தன்னுடைய கட்சி நிர்வாகிகளிடம் அப்போது பேசிய விஜய காந்த், 'காங்கிரஸ் கட்சி நம்மை ஆதரிக்கத் தயார். ஆனால், தி.மு.க-வும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. நம்மைவிட அவர்களுக்கு டெல்லியில் செல்வாக்கு அதிகம். அதனால், காங்கிரஸின் முடிவு ஒருவேளை மாறலாம்’ என்று சொன்னார். அது சரி...  விஜயகாந்தா, கருணாநிதியா என்ற நிலை வந்தபோது, 'கருணாநிதிதான் தேவை’ என்று காங்கிரஸ் அன்று முடிவெடுத்தது. அதே சமயம், நாடாளுமன்றத் தேர்தலில் அந்த நிலை தொடராமல்போனால், விஜயகாந்தைத் தங்கள் பக்கம் இழுக் கவும் அப்போதே தீர்மானித்துவிட்டது காங்கி ரஸ். ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலைத் தனியாக எதிர்கொள்ளும் திராணி காங்கிர ஸுக்கு இல்லை!

கிட்டத்தட்ட இதே நிலையில்தான் இருக்கிறது பாரதிய ஜனதாவும். எப்படியாவது அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துவிடலாம் என்று அதீத எதிர்பார்ப்புடன் இருந்தார்கள். ஆனால், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்ற முடிவில் இப்போது வரை ஜெயலலிதா உறுதியாக இருக்கிறார். இது பி.ஜே.பி-க்கு நெருக்கடியை ஏற்ப டுத்திவிட்டது. எனவே, அவர்கள் மாற்று அணியை உருவாக்கியாக வேண்டிய நிலைமையில், விஜய காந்தை நோக்கி வலை வீசிக் காத்திருக்கிறார்கள். முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், விஜயகாந்  திடம் இது சம்பந்தமாக நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றாலும், விஜயகாந்தை பி.ஜே.பி. தலைமை அதிகமாக நம்புவதை உணர முடிகிறது.

அடுத்த ஆட்சியைப் பிடிக்கும் கட்சியாக அகில இந்திய அளவில் காங்கிரஸும் பாரதிய ஜனதாவும்தான் இருக்கின்றன. ஆனால், அவர் களோடு கூட்டணி சேர தமிழகத்தில் முக்கியக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க.  இரண்டுமே தயங்குகின்றன என்பதுதான் உண்மை. எனவே, வேறு வழி இல்லாமல் விஜயகாந்தை நம்பியாக வேண்டிய சூழ்நிலைக்கு இந்த இரண்டு கட்சிகளும் வந்துவிட்டன.  விஜயகாந்தின் வாக்கு வங்கி இப்போதைக்கு எவ்வளவு என்பதைக் கணிக்க முடியவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சில தொகுதிகளில் 8 சதவிகிதமும் ஒருசில தொகுதிகளில் 10 சதவிகிதமும் அவ ருக்கு வாக்குகள் இருந்தன. இதற்குக் காரணம், கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் பிடிக்காத வாக்காளர்களின் ஆதரவு. ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்ததன் மூலமாக, அந்த சதவிகிதத்தில் நிச்சயம் பள்ளம் விழுந்திருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளில் 'எதிர்க்கட்சித் தலை வராக’ விஜயகாந்தின் செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் ஏற்பட்ட விரக்தியும் அந்த வாக்கு சதவிகிதத்தைக் குறைத்து இருக்கும். தே.மு.தி.க. சார்பில் வெற்றி பெற்ற ஏழு எம்.எல்.ஏ-க்கள் அவரைவிட்டு விலகிவிட் டார்கள். மற்றவர்களும் அவ்வளவு மனநிம்மதி யாக இல்லை என்று சொல்லப்படுகிறது. கட்சியின் நிர்வாகக் கட்டமைப்புப் பணிகள் எதுவும் நடக்காததால் மாவட்டக் கழகங்களில் செயல்பாடுகள் சுத்தமாக நின்றுவிட்டன.

இங்கிட்டு கதர்... அங்கிட்டு காவி

சமீபகாலமாக விஜயகாந்த் மீது ஜெயலலிதா தாக்கல் செய்யும் அவதூறு வழக்குகள் மட்டுமே அந்தக் கட்சிக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. எந்த ஊருக்கும் போகாமல், யாரையும் சந்திக்காமல், பத்திரிகையாளர்கள் கண்ணில் படாமல் இருந்த விஜயகாந்த், வாரம்தோறும் வேறு வேறு ஊர் நீதி மன்றங்களில் காட்சி தருவதன் மூலமாக கட்சிக் காரர்களுக்கு உற்சாகம் தரத் தொடங்கிவிட்டார்.  எனவே, இந்தக் குதிரையாவது கிடைக்காதா என்ற நம்பிக்கையில் இருக்கும் கதர்ச் சட்டைகள் ஒரு பக்கமும், காவிஉடைகள் மறுபக்கமும் ஆசை காட்டி கறுப்பு எம்.ஜி. ஆரை வசப்படுத்தப் பார்க்கின்றன. வழக்கம்போல இவர்களுக்கு விடை கண்டுபிடிக்க முடியாத பதில்களையே விஜயகாந்த் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஐந்தாறு எம்.பி-க்கள் டெல்லி போகாவிட்டால் விஜயகாந்துக்கு எந்த இழப்பும் இல்லை. ஆனால், அப்படி காங்கிரஸும் பாரதிய ஜனதா வும் இருக்க முடியாது அல்லவா? விஜயகாந்துக்கு தூது மேல் தூதுவிடுவதன் மூலமாக அவரது மவுசு கூடுவதற்கு மறைமுகமாக உதவுகிறார்கள். கேப்டன் எந்தப் பக்கம் சாய்வார் என்பதில் தெரிந்துவிடும்... இரண்டு கட்சிகளில் எது சாமர்த்தியமாகக் காய் நகர்த்தியது என்பது!