Published:Updated:

சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு

Vikatan Correspondent
சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு
சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு
சல்மான் குர்ஷித் கருத்துக்கு ராமதாஸ் எதிர்ப்பு

சென்னை, செப்.01,2011: பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டுள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் ஒரே குரலில் வலியுறுத்தியது. தமிழர்களின் இந்த உணர்வுகளை மதித்து மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானத்தை மனித உரிமை ஆர்வலர்களும், மனிதநேயம் மிக்கவர்களும் பாராட்டி வரவேற்றுள்ளனர். ஆனால், மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளார். 3 தமிழர்களுக்கும் எப்படியாவது தண்டனையை நிறைவேற்றிவிட வேண்டும் என்ற தங்களின் துடிப்பை மறைமுகமாக அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என கூறியிருப்பது தமிழக சட்டப்பேரவையை அவமதிக்கும் செயலாகும். மத்திய சட்ட மந்திரியின் இந்தக் கருத்து கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.