Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

''எங்கள் நாட்டு வளங்களை இந்திய மீனவர்கள் சூறையாடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது எங்கள் அரசின் கடமை. இதற்கு முன் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்துவந்த தமிழக மீனவர்களைக் கைதுசெய்தால், உடனே விடுதலை செய்துவந்தோம். ஆனால், அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அதனால், இப்போது இலங்கைச் சிறையில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும் உத்தேசம் இல்லை. அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை வாங்கித் தரப்போகிறோம்!'' - இந்தியா வந்திருக்கும்  இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், ஒவ்வொரு வார்த்தையிலும் திமிர் தொனிக்க இந்தியத் தலைநகரில் அளித்த பேட்டி இது!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்பதுகுறித்து இங்கே பெரும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றம் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை அதற்கான கோரிக்கைகள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், 'கச்சதீவா... அது முடிந்துபோன விவகாரம்!’ என்று டெல்லியில் அமர்ந்துகொண்டே ஜி.எல்.பெரீஸ் எப்படி தீர்ப்பு சொல்ல முடியும்? இந்தியா, ஜனநாயக நாடுதான்... சந்தேகம் இல்லை. அதற்காக அண்டைநாட்டு அமைச்சர் நம் நாட்டின் தலைநகரிலேயே அமர்ந்துகொண்டு, இந்தியாவைப் பற்றியும் இந்தியர்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசி சவால்விடுவது, எந்தவிதத்தில் நியாயம்?

இனப்படுகொலை தொடங்கி, 'இந்திய’ மீனவர்கள் படுகொலை வரை பல காரணங்களை முன்வைத்து இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற வாதங்கள் வலுப்பெற்றுவரும் நேரத்தில், அந்த காமன்வெல்த் மாநாட்டுக்கான அழைப்பிதழை அளிக்க வந்திருக்கும் இந்த இலங்கை அமைச்சர், 'இலங்கை மீதான மனிதஉரிமை மீறல்கள் குற்றச்சாட்டு பற்றிய மற்ற நாடுகளின் கருத்துகளுக்கும், அவை காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதற்கும் தொடர்பு இல்லை’ என்று இந்தியாவுக்கும் சேர்த்து கருத்து சொல்லியிருப்பது உச்சகட்ட அதிர்ச்சி!

இந்தியா எந்தெந்த மாநாட்டில் பங்கெடுக்க வேண்டும், பங்கெடுக்கத் தேவை இல்லை என்பதையெல்லாம் அடுத்த நாட்டில் இருந்து வந்த அமைச்சர் ஒருவர், இந்தியப் பிரதமரின் இல்லத்துக்கு அருகில் அமர்ந்துகொண்டு பேசுகிறார் என்றால், அவருக்கு இந்தத் துணிச்சலைக் கொடுத்தது யார்?

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம்தான் எனில்... வெட்கக்கேடு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism