கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா அண்மையில், ``ஒருநாள் இந்தியாவின் தேசியக் கொடியாகக் காவிக்கொடி இருக்கும். செங்கோட்டையில் காவிக் கொடி ஏற்றப்படும் நாள் வரும்'' என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இவரின் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஈஸ்வரப்பா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ``முகலாயர்கள் 36,000 கோயில்களை அழித்திருக்கின்றனர். ஸ்ரீரங்கப்பட்டணாவில் மசூதி இருந்த இடத்தில், அனுமன் கோயில் இருந்தது. மசூதி கட்டும்போது, அனுமன் கோயிலை அருகில் இடம் மாற்றினார்கள். ஒரு கோயிலை இடமாற்றம் செய்து அதன் இடத்தில் மசூதி கட்டப்பட்டது ஏன்?
ஸ்ரீரங்கப்பட்டணாவில் அனுமன் கோயில் இருந்ததை இஸ்லாமியர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். இதற்கு காங்கிரஸ் என்ன சொல்கிறது? நீதிமன்றத் தீர்ப்புகளின்படி, அமைதியான முறையில் சட்டத்தின் வழியில் அனைத்து கோயில்களையும் மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்றார்.
