"தொடர்ந்து உங்கள் உறவினர்கள்தானே அ.தி.மு.க-வில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்?"
"
அந்த அம்மா அவங்க தேவைக்கு அவர் களைப் பயன்படுத்திக்கொண்டார். அப்படி உதவியவர்களை... வெங்கடேஷ் வரை எட்டு பேருக்குப் பதவி தந்து பறிச்சாங்க. எதற்காக நீக்கினார்கள் என்பதை அந்த அம்மாதான் சொல்லணும். ஆனால், என்னை அவர் நீக்கவில்லை. நான் அவங்க கட்சியில் இருந்தால்தானே நீக்க முடியும். ஒரு தனிப் பட்ட விவாதத்தில், பதில் சொல்லிவிட்டு வெளியில் வந்தவன் நான். 'அது என்ன?' என்பது பெர்சனல். இதை இல்லைன்னு அந்த அம்மாவை மறுக்கச் சொல்லுங்க. இதைப் பற்றி அந்த அம்மாவோடு தனியா விவாதம் செய்யவும் தயாரா இருக்கேன்!"
"திடீர் என காங்கிரஸுக்கு அ.தி.மு.க அழைப்பு விடுத்திருப்பதன் மூலம், ஏற்கெனவே அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள், ம.தி.மு.க-வினர் வருத்தப்பட மாட்டார்களா?"
"இது ஒரு தந்திரம்! கலைஞர் எப்படி 'அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களோடு பேசிக்கொண்டு இருக்காங்க'ன்னு சொல்றாரோ... அந்த மாதிரி தான் இதுவும். என்னைப் பொறுத்தவரை, இன்றைய சூழலில் இந்த அம்மாவுக்கு எந்தக் கூட்டும் தேவை இல்லை. இருக்கும் கட்சிகளை வைத்துக்கொண்டு, இன்னும் ஓரிரு கட்சிகளைச் சேர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தாலே... தனி மெஜாரிட்டியில் ஆட்சி அமைக்கலாம்!"
"விஜயகாந்த்தின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"விஜயகாந்த் நான் மிகவும் நேசிக்கும் நல்ல நண்பர். விஜயகாந்த் 8 முதல் 10 சதவிகித வாக்குகளைப் பிரிப்பார் என நான்தான் முதலில் கணித்தேன். அப்போது,'அவரை சேர்த்துக்குங்க'ன்னு அ.தி.மு.க தலை மைக்கு மறைமுகமாகவும் சொன்னேன். அவர் பிரிக்கும் வாக்குகள் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள். இன்றைய நிலையில், தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக் கூடாது என முடிவு பண்ணவேண்டி யது விஜயகாந்த்தான். அ.தி.மு.க - தே.தி.மு.க கூட்டணிக்குப் பேசிட்டு இருக்காங்கன்னு சொல்றாங்க. பார்ப் போம்!"
"ஆ.ராசா தன் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறாரே?"
"அமைச்சர் பூங்கோதை ஓர் அதிகாரி யிடம் பேசியதற்காக, அந்த அம்மாவை உடனடியாக நீதிமான் மாதிரி நீக்கினீர் களே! ஈரோடு அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் அட்டகாசத்தைப் பார்த்ததும், அவரை நீக்கினீர்களே. ஏன் அந்த அளவு கோல் ராசாவுக்கு மட்டும் வரவில்லை? ராசாவை நீக்க நீங்கள் இத்தனை நாள் எடுத்துக்கொண்டது ஏன்? இதற்கான பதில், இப்போது இந்தியாவுக்கே தெரியும்!"
"தி.மு.க-வில் அழகிரி - ஸ்டாலின் இருவருக்கும் இடையே இருக்கும் போட்டி வெளிப்படையாகத் தெரிகிறதே?"
"தி.மு.க-வில் அண்ணா, தனக்குப் பிறகு இவர்தான் என யாரையும் கை காட்டவில்லை. ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் வரலாம். அந்த அண்ணா வழியில் கலைஞரும், 'எனக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி தி.மு.க-வில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் கட்சியின் தலைவராக வரலாம்'னு அறிவிக்க வேண்டியதுதானே. 'எனக்குப் பிறகு, என் இடத்துக்கு ஸ்டாலின் அல்லது அழகிரி இருவரில் ஒருவர்தான் தகுதி ஆனவர்' என்ற போட்டியை அவரேதான் உருவாக்கினார். |