Published:Updated:

அஸ்ஸாம் தீவிரவாத தாக்குதலில் 49 பேர் பலி: பிரதமர் மோடி கண்டனம்!

அஸ்ஸாம் தீவிரவாத தாக்குதலில் 49 பேர் பலி: பிரதமர் மோடி கண்டனம்!
அஸ்ஸாம் தீவிரவாத தாக்குதலில் 49 பேர் பலி: பிரதமர் மோடி கண்டனம்!
அஸ்ஸாம் தீவிரவாத தாக்குதலில் 49 பேர் பலி: பிரதமர் மோடி கண்டனம்!

கவுகாத்தி: அஸ்ஸாம்  மாநிலத்தில் போடோ தீவிரவாதிகள்  5 இடங்களில் நடத்திய தாக்குதல்களில் 49 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அஸ்ஸாம்  மாநிலம் சோனித்பூர் மாவட்டத்தில் அருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள இரண்டு கிராமங்களில் நவீன ஆயுதங்களுடன் தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர்.

கோக்ரஜார் மாவட்டத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நேற்று ஒரே நாளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 37 பேர் பலியானார்கள் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானோர்கள் சடலங்கள் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. தீவிரவாதிகள் தாக்குதலில் மொத்தம் 49 பேர் பலியாகியுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்  பிரதமர் மோடி, " சோனித்பூர் மற்றும் கோக்ரஜாரில் அப்பாவி பொதுமக்களைக்  கொன்றது கோழைத்தனமான செயலாகும். நமது எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுடன் இருக்கும். இவ் விவகாரம் தொடர்பாக அஸ்ஸாம்  முதல்வர்  தருண் கோகாய் மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசியுள்ளேன். ராஜ்நாத் சிங் அஸ்ஸாம்   மாநிலம் சென்று பணிகளை மேற்கொள்வார் " எனக் கூறியுள்ளார்.

இதனிடையே அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "எக்காரணத்திலும் அப்பாவி பொதுமக்கள் கொலை செய்யப்படுவதை நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசு அஸ்ஸாமில் உள்ள நிலையைக் கண்காணித்து வருகிறது.

சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு பாதுகாப்பு படை சென்றுள்ளது. இதுதொடர்பாக அஸ்ஸாம்  மாநில முதல்வர் தருண் கோகாயுடன் பேசியுள்ளேன். அவர் என்னிடம் நிலைமை குறித்து விவரித்தார். மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்"  என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜ்நாத் சிங் அசாம் மாநிலத்திற்கு  நேரடியாகச் சென்று பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வை மேற்கொள்ள உள்ளார்.