Published:Updated:

கலையுலகம் உள்ளவரை பாலசந்தர் புகழ் வளரும்: கருணாநிதி புகழாரம்!

கலையுலகம் உள்ளவரை பாலசந்தர் புகழ் வளரும்: கருணாநிதி புகழாரம்!
கலையுலகம் உள்ளவரை பாலசந்தர் புகழ் வளரும்: கருணாநிதி புகழாரம்!

சென்னை: கலையுலகம் உள்ளவரை இயக்குநர் கே.பாலசந்தர் புகழ் வளரும் என்று கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

கலையுலகம் உள்ளவரை பாலசந்தர் புகழ் வளரும்: கருணாநிதி புகழாரம்!

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ''இந்த துயரச் சம்பவம் யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்து விட்டது என்பதை சொல்லவே நெஞ்சம் குமுறுகிறது. ‘இயக்குனர் சிகரம்’ என்று தமிழ்நாட்டில் இவருக்கு சிறப்புப் பெயர் உண்டு. என்னருமை நண்பர் கே.பி. மறைந்தார் என்பது கண்ணீரோடு நிற்கக் கூடிய துயரச் சம்பவம் அல்ல. கலைத்துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கே.பாலச்சந்தரின் இழப்பை எண்ணி எண்ணி அழுகின்ற துயரச் சம்பவமாகும். அவர் மறைந்து விட்டாலும் அவரால் உருவாக்கப்பட்ட கலையுலக சிறப்புக்களும், என் போன்ற நண்பர்களிடம் காட்டிய பேரன்பும், என்றைக்கும் யாராலும் மறக்க முடியாதவை. கலையுலகம் உள்ளவரை அவர் புகழ் மேலும், மேலும் வளரும்.

கலையுலகம் உள்ளவரை பாலசந்தர் புகழ் வளரும்: கருணாநிதி புகழாரம்!

1941-42 ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ வார இதழில் `நன்னிலம் நண்பர்’ என்ற தலைப்பில் வாரம் தோறும் ஒரு கட்டுரை வெளிவரும். அந்த நன்னிலம் நண்பர் யாரென்றால், நமது தஞ்சை மாவட்டத்தில் உள்ள நன்னிலம் என்ற ஊரில் பள்ளி மாணவராய் இருந்து படித்து பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் விளக்கமாக புரிந்து கொள்வதற்காக, அண்ணா, `திராவிட நாடு’ இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து கேள்விக்கணைகள் தொடுத்தவர் இந்த பாலச்சந்தர் தான்!

அவர் இப்பொழுது மறைந்திருக்கும் நிலையில், அவர் தன்னுடைய பகுத்தறிவு இயக்கம் பற்றிய சந்தேகங்களையும், திராவிட இயக்கம் பற்றிய கருத்துக்களையும் விரிவாக தெரிந்து கொள்வதற்காக அண்ணாவின் திராவிட நாடு இதழுக்கு எழுதிய கடிதங்களுக்கு பதில் அளித்து அண்ணா அவர்கள் வெளியிட்ட அந்தக் கருத்துக்கள் வாரந்தோறும் வெளிவந்தது. அதன் மூலம் நான் பாலசந்தரை தெரிந்து கொண்டு, அந்த 41-42 ஆண்டுகளிலேயே எனக்கும் அவருக்கும் நட்பும் நல்ல பழக்கமும் ஏற்பட்டது. அந்த சம்பவங்களை அவரும் நானும் அண்மைக் காலத்திலே கூட மறவாமல் ஒவ்வொரு உரையாடலிலும் பதியவைத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.