Published:Updated:

ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டினர் விவரங்கள்: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டினர்  விவரங்கள்: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டினர் விவரங்கள்: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
ஹோட்டல்களில் தங்கும் வெளிநாட்டினர்  விவரங்கள்: மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!

சென்னை: தனியார் ஹோட்டல்கள் மற்றும் விடுதிகளில் தங்கும் வெளி நாட்டினர் பற்றிய  விவரங்களை ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"
இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர் தங்களின் விவரங்களை வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. அதற்காக வெளிநாட்டவர் பதிவு அலுவலகங்களில் வழங்கப்படும் படிவம் சி யைப்    பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

அதில் நிறைய குளறுபடிகள் நடப்பதால் ஆன் லைன் மூலம் பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய  தூதரக சேவைகளை நவீனப்படுத்தவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உள்துறை அமைச்சகம் இந்த புதிய மாற்றத்தைக்  கொண்டு வந்துள்ளது.

எனவே, இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினர் தங்களை பற்றிய விவரங்களை http//boi.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும், ஓட்டல்கள் விடுதிகள், கல்வி நிறுவனங்கள், வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் வெளிநாட்டினர் தங்கும் போது அவர்களின் விவரங்களை அந்தந்த தங்குமிடங்களின் உரிமையாளர்கள் ஆன் லைனில் பதிவு செய்ய வேண்டும்.

இதைப்  பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அத்துடன் 5 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனையும் வழங்கப்படும். இது தொடர்பான சந்தேகங்களை chiochn@nic.in என்னும் மின்னஞ்சல் முகவரியையும், 044 2825172, என்னும் 24 மணி நேர தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்"  என்று கூறப்பட்டுள்ளது.