Published:Updated:

எம்.ஜி.ஆர். நினைவு நாள்: ஜெயலலிதா, முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!

 எம்.ஜி.ஆர். நினைவு நாள்:  ஜெயலலிதா, முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!
எம்.ஜி.ஆர். நினைவு நாள்: ஜெயலலிதா, முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!
 எம்.ஜி.ஆர். நினைவு நாள்:  ஜெயலலிதா, முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!

சென்னை:  எம்.ஜி.ஆரின் 27 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதிமுக வை உருவாக்கிய தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

இதனையொட்டி தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மையாதை செலுத்தி வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா,  தனது   போயஸ்கார்டன் இல்லத்தில், எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு  மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அக்கட்சியினரும்,  பல்வேறு கட்சி தலைவர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். சமாதியில் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.

 எம்.ஜி.ஆர். நினைவு நாள்:  ஜெயலலிதா, முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!

அதனை தொடர்ந்து கட்சியின் பொருளாளர், முதல்வர்   ஓ.பன்னீர் செல்வம் உறுதிமொழி வாசிக்க அங்கே கூடியிருந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் திரும்ப வாசித்து உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர். பின்னர் அனைவரும் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.

 எம்.ஜி.ஆர். நினைவு நாள்:  ஜெயலலிதா, முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி!

இதே போல ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சி  நிர்வாகிகள்  எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

தே.மு.தி.க. கட்சி தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு கட்சியின் தலைவர் விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்த பெரியார், எம்.ஜி.ஆர். உருவ படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எம் .ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

படங்கள்: வீ. நாகமணி