Published:Updated:

காஷ்மீரில் பாஜகவின் முதல் இஸ்லாமிய எம்.எல்.ஏ.!

விகடன் விமர்சனக்குழு
காஷ்மீரில்  பாஜகவின்  முதல் இஸ்லாமிய  எம்.எல்.ஏ.!
காஷ்மீரில் பாஜகவின் முதல் இஸ்லாமிய எம்.எல்.ஏ.!
காஷ்மீரில்  பாஜகவின்  முதல் இஸ்லாமிய  எம்.எல்.ஏ.!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவின் சட்ட மன்ற உறுப்பிராக  இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

நடந்து முடிந்த ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில்,  மாநிலத்தில் இஸ்லாமிய மதத்தினர்  பெரும்பான்மையாக வசிப்பதால் பாஜக சார்பில்  87 தொகுதிக்கான வேட்பாளர்கள் பட்டியலில், 34 முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். .  இவர்களில் 25 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போட்டியிட்டனர்.

ஆனால் 34 பேரில் அப்துல்கனி கோக்லி என்ற ஒரு இஸ்லாமிய  வேட்பாளர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இவர் ரசோரி மாவட்டம் கலாகோடே தொகுதியில் இருந்து காஷ்மீர் சட்டமன்றத் தொகுதிக்கு  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ரச்பால் சிங்கை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ரச்பால் சிங் இதே தொகுதியில் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்று இருந்தார். கலா கோடே தொகுதியில் முஸ்லிம்களும் இந்துக்களும் சரிசம அளவில் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் வரலாற்றில் பாஜக  சார்பில் எம்.எல்.ஏ. ஆன முதல் இஸ்லாமிய  மதத்தைச் சேர்ந்த வேட்பாளர் அப்துல்கனி கோக்லி ஆவார். இதற்கு முன் 1972 ஆம் ஆண்டில்  பாரதீய ஜன சங்கம் சார்பில் ஜம்மு கிழக்கு தொகுதியில் ஷேக் அப்துல் ரகுமான் என்ற முஸ்லிம் வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.