Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:
தலையங்கம்
##~##

'பயணிகளுக்கு பத்தே ரூபாயில் பாதுகாப்பான குடிநீர்’ என்ற அறிவிப்புடன் பேருந்து நிலையங்களிலும் பேருந்துகளிலும் 'அம்மா குடிநீர்’ விற்பனையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியிருக்கிறார். பயணிகளின் மீதான கரிசனமாக இதைக் கருதும் அதே வேளையில், குடிநீர் என்பது குழாய் மூலம் வரலாம், குளத்தில் இருந்து வரலாம், ஏரியில் இருந்து வரலாம், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளில் இருந்தும்கூட வரலாம். ஆனால், லாரிகளின் மூலமாக மட்டும் வரவே கூடாது என்பதுதான் தமிழக அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்போது இரும்புக்கரம் கொண்டு அமலாக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புத் திட்டம், தமிழக நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், 'புதிய வீராணம்’ திட்டம் சென்னை மக்களின் தாகத்தைத் தீர்க்கவும் பெருமளவு உதவிசெய்தன. ஆனால், பல ஆண்டுகளுக்கு முன் அமலான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் பதிக்கப்பட்ட குழாய்களைச் சீரமைக்க வேண்டிய தருணம் இது.  

'நாரை அறியும் நானூறு குளம்; அறியாதது நாலாயிரம் குளம்’ என்றொரு முதுமொழி உண்டு. ஆனால், நாரைக்குத் தெரிந்த குளங்கள்கூட, இப்போது நம் கண்களுக்குத் தெரியாத வண்ணம் அதீத ஆக்கிரமிப்பில் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. இனி எதிர்காலத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான குடிநீரை விநியோகம் செய்ய வேண்டுமென்றால், எஞ்சியிருக்கும் நீர்நிலைகளைத் தூர் வாரி, அவற்றுக்குத் தண்ணீர் கொண்டுவரும் வாய்க்கால்களைச் சீர்படுத்துவது அவசியம்.

கும்மிடிப்பூண்டியில் 330 கோடி ரூபாய் செலவில் அமைய இருக்கும் புதிய நீர்தேக்கம் போல, தமிழகம் முழுக்க அனைத்து ஏரி, குளங்களையும் புனரமைக்க வேண்டும். அதற்கென நிதி ஒதுக்கி, முன்னுரிமை கொடுத்து உளப்பூர்வமாக பணிகளை மேற்கொள்வது, மிக மிக முக்கியம்.

தனியார் தண்ணீர் 20 ரூபாய்; ரயில் நீர் 15 ரூபாய்; அம்மா குடிநீர் 10 ரூபாய். இப்படி மலிவு விலைப் பொருட்களின் பட்டியலில் மட்டுமே இடம் பிடிப்பதே 'அம்மா குடிநீரின்’ சாதனையாக இருக்கக் கூடாது!