Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆசிரியர்
தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

வெளிநாட்டுப் படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும் ஏங்கும் இந்திய இளைஞர்களின் கனவு தேசம் அமெரிக்கா!

இதற்கு முன்பெல்லாம், ஏழை நாட்டைப் பார்வையிட்டு கை தூக்கிவிட வந்த ரட்சகர்களின் ஆசீர்வாதம்போலவே இருக்கும், அமெரிக்க அதிபர்களின் இந்திய வருகை!

குடிசைப் பகுதிகளுக்குச் சென்று சுகாதார நிலையைப் பார்வையிடுவது, ஆட்கொல்லி நோயைக் கட்டுப்படுத்த நன்கொடை அள்ளி வழங்குவது, கடன் உதவி மற்றும் மானிய உத்தரவாதங்கள் அளிப்பது என்பதாக... விருந்தினர் அதிபரின் கையே ஓங்கியிருப்பது வழக்கம்!

இந்த முறை ஒபாமாவின் வருகையோ, 'அங்கே இருந்து இங்கு என்ன கொண்டுவந்தேன்' என்று இந்தியர்களுக்குச் சொல்வதைவிடவும், 'இங்கே இருந்து அங்கு என்னவெல்லாம் கொண்டுசெல்வேன்' என்று அமெரிக்க குடிமக்களுக்குக் காட்டுவதிலேயே கவனமாக அமைந்தது.

இந்தியாவின் மக்கள் தொகைப் பெருக்கம் ஒரு பலவீனமாகவே பார்க்கப்பட்ட நிலை மாறி, வாங்கும் சக்தி உள்ள மிகப் பெரிய சந்தையாக நம் தேசம் விரிந்து நிற்கிறது என்பதை, 'அமெரிக்க விற்பனைப் பிரதிநிதி'யாக வந்த ஒபாமா தெளிவாக்கி இருக்கிறார். மின் உற்பத்திக்கான சாதனங்கள், விமானங்கள், ராணுவத் தளவாடங்கள் என்று இந்தியாவிடம் விற்பதற்காக அவர் போட்டிருக்கும் ஒப்பந்தங்கள், வேலை இல்லாத் திண்டாட்டத்தின் பிடியில் இருந்து அமெரிக்கர்களை ஓரளவாவது மீட்க உதவும்!

அது மட்டுமா..? 'ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா பெறுவதற்கான உதவிகளை அமெரிக்கா செய்யும்' என்று நமது நாடாளுமன்றத்திலேயே உத்தரவாதம் அளித்ததோடு... பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கும் லேசாகக் குட்டு வைத்திருக்கிறார் ஒபாமா.

அத்தனையும் பார்க்கும்போது, அமெரிக்காவுக்கே கை கொடுக்கும் உயரம் நோக்கி வளர்கிறோம் என்ற பெருமிதம் நமக்குள் எழத்தான் செய்கிறது. ஒபாமா வியக்கும் மகாத்மாவின் இந்த தேசம், தனது எதிர்காலம் குறித்து வலுவான ஒரு கணக்குடன்தான் நகர்கிறது!

தலையங்கம்
தலையங்கம்