"புலிகள் அமைப்பைத் தடை செய்வதற்கு வலுவான காரணங்களை மத்திய அரசாங்கம் வைத்திருந்ததாகக் கூறுகிறார்களே?"
"அத்தனை காரணங்களையும் என்னுடைய வாதங்களால் தவிடுபொடியாக்கி இருக்கிறேன்! கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சந்தியோக், தீர்ப்பாயத்தின் முன்பாகச் சில ஆவணங் களைச் சமர்ப்பித்தார். அரசாங்கத்துக்கு மட்டுமே தெரிந்து இருக்க வேண்டிய செய்திகள், வெளியே சொல்லக் கூடாத தகவல்கள் அதில் அடங்கி இருப்ப தாகச் சொன்னார். இவற்றை நீதிபதி விக்ரம்ஜித் சென் ஏற்றுக்கொள்ள மறுத்தார். 'இன்டர்நெட்டில் இருந்து எடுக்கப் பட்ட இந்தத் தகவல்களை யார் வேண்டுமா னாலும் தாக்கல் செய்ய முடியும். இதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று நீதிபதி மறுத்து விட்டார். 'தமிழ் ஈழம் என்று விடுதலைப் புலி கள் சொல்வது இலங்கையில் உள்ள தமிழர் வாழும் பகுதிகளை மட்டும் அல்ல; இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும் உள்ளடக்கியதுதான்' என்பதுதான் தடைக்கான மிக முக்கியக் காரணமாகச் சொல்கிறார்கள். இந்திய நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்துத் துண்டாடுவதால்தான், புலிகள் அமைப்பைத் தடை செய்கிறார்களாம். 'இதில் ஒரு துளிகூட உண்மை இல்லை' என்று சொன்ன நான், 'அதற்கு ஏதாவது ஓர் ஆவணத் தையாவது மத்திய அரசாங்கம் காட்டினால், நான் புலிகள் சார்பாகப் பேசுவதில் இருந்து வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு, ஈழத் தந்தை செல்வா காலத்தில் வட்டுக் கோட்டை மாநாட்டில் வைக்கப்பட்ட தீர்மானத்தைச் சொன்னேன். 'தமிழீழ அரசு என்பது இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண மக்களைக்கொண்டதுதான்' என்று அன்று செல்வா வரையறுத்தார். அதைத்தான் தனது மாவீரர் தின உரைகளில் பிரபாகரன் வழி மொழிந்தார். பிரபாகரன் எப்போதும் உரையாற் றும் மேடையில் ஒரு வரைபடம் இருக்கும். அதில் இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மட்டும்தான் இருக்கும். இதைப் பார்த்தாலே போதுமே. வேறு என்ன ஆதாரம் வேண்டும் என்று கேட்டேன். இன்றைக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் வரைபடம் வெளியிடப்பட்டு உள்ளது. அதிலும் இருப்பது வட கிழக்குப் பகுதிகள்தானே தவிர, தமிழ்நாடு அல்ல. புலிகள் மீதான தடைக்கு மிக முக்கிய மாகச் சொல்லப்படும் காரணமே ஆதார பூர்வமாகத் தகர்க்கப்பட்டுள்ளது!"
"இலங்கையில் இருந்து ரகசியமாக தமிழ்நாட்டுக்குள் புலிகள் வந்துவிடுகிறார்கள் என்கிறார்களே?"
"சென்னையில் நடந்த விசாரணையின்போது க்யூ பிராஞ்ச் போலீஸ் அதிகாரி ஒருவர், இந்தக் காரணத்தைச் சொன்னார். அவரிடம், 'சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 10 (ஏ) (1)ன் படி இதுவரை யாரையாவது கைது செய்திருக்கிறீர்களா?' என்று நான் கேட்டேன். 'இல்லை' என்று அவர் பதில் அளித்தார்விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக ஒருவர் இருந்தால் மட்டுமே, இந்தப் பிரிவின்படி கைது செய்ய முடியும். அதன்படி பார்த்தால், இவர்கள் அந்த அமைப்பைச் சேர்ந்த யாரையும் கைது செய்யவில்லை. பிறகு, எப்படி புலிகள் உள்ளே நுழைந்துவிடுகிறார்கள் என்று காரணம் சொல்ல முடியும்?
நியூஸிலாந்து நாட்டின் உச்ச நீதிமன்றம், கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு தீர்ப்பைக்கொடுத்து இருக்கிறது. அகதி அந்தஸ்து கேட்டு விண்ணப் பித்த ஈழத் தமிழர் தொடர்பான வழக்கு அது. 'விடுதலைப் புலிகள் இயக்கமானது, ஓர் அரசியல் இயக்கம். அது இலங்கையில் வாழும் வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் உரிமைக்காகப் போராடுகிறது' என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. நியூஸிலாந்து உச்ச நீதிமன்றத்தின் அத்தாட்சியைப் பெற்று, அந்தத் தீர்ப்பின் நகலை நான் சமர்ப்பித்து இருக்கிறேன். நியூஸிலாந்துக்குத் தெரிகிற விஷயங்கள் நம் நாட்டுக்குத் தெரிய வில்லை என்பதுதான் ஆச்சர்யமானது!"
"இதில் தமிழக அரசாங்கத்தின் வாதங்கள் என்ன?"
"தடையை நீட்டிக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் வாதம்! தடை நீட்டிக்கத் தேவை யான ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த சம்பவங் களைப் பட்டியலிட்டுக் கொடுத்து இருப்பதும் தி.மு.க. அரசுதான். மத்திய அரசாங்கம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை சிரமேற்கொண்டு செய்து முடிப்பதைத்தானே தனது வாழ்நாள் கடமையாக கருணாநிதி கருதுகிறார்!"
"இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு முனைப்புக் காட்ட வேண்டும் என்று பிரதமர் மற்றும் சோனியாவிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறாரே முதல்வர்?"
|