Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆசிரியர்
தலையங்கம்

சீச்சீ!

தலையங்கம்

திரிகளின் மீது தாக்குதல் தொடுக்க வாங்கிய ராணுவ பீரங்கிகளின் பேரத்துக்காக கோடிகளில் கமிஷன் அளிக்கப்பட்டதாக வெடித்த புகாரின் மிச்சம் மீதங்கள், வருடங்கள் பல கடந்தும் புகைந்துகொண்டே இருக்கின்றன. கார்கில் போரில் நெஞ்சு நிமிர்த்தி எல்லை காத்த நம் வீரர்களுக்காகச் சீருடை வாங்கியதில் கொள்ளை அடித்ததாக ஒரு புகார் எழுந்து, நாட்டின் மானத்தை நிர்வாணமாக்கிச் சிரித்தது. ரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த வீரர்களை அடக்கம் செய்வதற்காகத் தயாரித்த சவப்பெட்டிகளில்கூட கமிஷன் வைத்து ஊழல் செய்ததாகக் கிளம்பிய பகீர் குற்றச்சாட்டு இன்னமும் நம் நெஞ்சங்களில் தழும்பாக வீற்றிருக்கிறது!

'இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன்!' என்று ராணுவ வீரர்களை வைத்து இன்னும் எப்படியெல்லாம் ஏப்பம்விடலாம் என்று அரசியல்வாதிகள் சிந்திக்காமலா இருப்பார்கள்? சிந்தித்தார்கள். செயல்பட்டார்கள்!

ராணுவ சேவையில் உயிர் தியாகம் செய்தோரின் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவதில் அடுக்கடுக்காக, 'ஆதர்ச' முறைகேடுகள் மும்பையில் நிகழ்ந்து இருப்பதாக அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டு விண்முட்ட எழும்பி நிற்கிறது. இதில் ராணுவத்துக்கோ, தியாகத்துக்கோ எந்தச் சம்பந்தமும் இல்லாத அந்த மாநில முதல்வரின் உறவினர்களுக்கும்கூட, வீடுகள் ஒதுக்கியிருப்பதாக வரும் தகவல்கள் கேவலத்தின் உச்சகட்டம்.

கொடிநாள் அணிவகுப்பு, ஜெய்ஹிந்த் கோஷங்கள், குண்டு துளைக்காத மேடை யில் நின்று தேச பக்திப் பிரகடனங்கள்... எல்லாமே வேஷம்தானா? மனித மாமிசத்தைத் தின்பதற்கு ஒப்பானதல்லவா இந்தப் பெரும்பாவம்? ஊழலே... அரசியலே... உனக்கு இடம் பொருள் ஏவல் தெரியாதா? வெட்கம் மானம் துளியும் கிடையாதா?

நெற்றிப்பொட்டின் ஒற்றை ரூபாயிலும் கமிஷன் அடிக்காவிட்டால், உனக்கு அஞ்சலி செலுத்திய 'சந்தோஷம்' கிடைக்காதா?

தலையங்கம்
தலையங்கம்