Published:Updated:

யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?

யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?

யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?
யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?
யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ப.திருமாவேலன்.
ஒவியங்கள்:அரஸ்
யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?

துரை பாண்டி கோயில் மைதானத்தில் கூடிய கூட்டத்தைப் பார்த்து, "இது கின்னஸ்

சாதனை" என்று மகிழ்ந்தார் ஜெயலலலிதா. கூட்டம் பார்த்து ஜெயலலிதா மலைத்துப்போனது உண்மை. ஆனால், மயங்கி விடவில்லை என்பது அவரது பேச்சின் இறுதியில் புலப்பட்டது. எம்.ஜி.ஆர். மயக்கம் தீராதவர்கள், இரட்டை இலையை இன்னும் நேசிப்பவர்கள், ஜெ

மீதான பற்றுக்கொண்டவர்கள், கருணாநிதியை எதிர்க்க இவர் மட்டுமே மாற்று என்று நினைப்பவர்கள், ஆளும் கட்சி மீதான அதிருப்தி ஆகிய ஐந்து வகைப் பட்ட மனிதர்கள்தான் இதற்கு வந்திருந்தார்கள். தேர்தல் வெற்றிக்கு இதுபோதாது என்று ஜெ. உணர்ந்துவிட்டதை அவரே ஒப்புக்கொண்டார். 'கூட்டணியை உருவாக்குவதில் அலட்சியம் காட்டினால், மீண்டும் போயஸ் கார்டனில் முடங்க வேண்டியதுதான்' என்ற யதார்த்தத்துக்கு அவர் வந்துவிட்டதையே அந்த வார்த்தைகள் காட்டின.

யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?

"கூட்டணி குறித்த எனது கணக்கு தப்பாது. எனது கூட்டணிக் கணக்கு சரியாக இருக்கும். மிகத் துல்லியமான கணக்கு அது. கூட்டணி எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் நான் அறிவேன். 2011-ல் கோட்டையை அ.தி.மு.க. பிடிக்கும். நீங்கள் 100 சதவிகிதம் உழைக்கத் தயாராக இருங்கள். வெற்றிக் கனியைப் பறிக்கும் சூத்திரத்தை நான் சொல்லித் தருகிறேன்" என்று சொன்னார் ஜெ. எல்லாவற்றையும் பட்டவர்த்தனமாகக் கொட்டித் தீர்த்தவர், கூட்டணி குறித்து ரகசிய வார்த்தைகளை அளவாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

'ஜம்போ அலையன்ஸ்' என்று சொல்லத்தக்க கூட்டணியை உருவாக்கிக் காட்ட வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் கனவும் கணக்கும். "ஜெயலலிதா சொல்லும் சூத்திரம் என்பது புதிய விஷயம் அல்ல; அண்ணா 67 தேர்தலில் கடைப் பிடித்ததுதான். தனக்கு என சொந்த செல்வாக்குகொண்ட தலைவர்களான அண்ணா, ராஜாஜி, காயிதே மில்லத், பி.ராமமூர்த்தி, ம.பொ.சி. ஆகிய ஐந்து பேரும் தங்களது கோபதாபங்களை மறந்து 'காங்கிரஸை வீழ்த்துவோம்' என்ற ஒரே குறிக்கோளுக்காக ஒன்று சேர்ந்தார்கள். இதில், இனவாதம், மொழிவாதம், வகுப்புவாதம், வர்க்கவாதம், லோகாயதவாதம் பேசிய எல்லாரும் ஒன்று சேர்ந்தார்கள். அதைப்போல இன்று 'தி.மு.க-வை வீழ்த்துவோம்' என்ற லட்சியத்துக்காக தி.மு.க-வின் எதிரிகள் அனைவ ரையும் ஒருமுகப்படுத்த முடியுமா என்ற யோசனையில் ஜெயலலிதா இருக்கிறார். ராஜாஜிக்கு, அண்ணா தலைவர் அல்ல; பி.ராமமூர்த்திக்கு, ராஜாஜி ஆகாது. ஆனாலும், அரசியல் நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்தார்கள். அதைப்போல் இன்றைக்கு ஓர் அணியை அமைத்தால் மட்டுமே தி.மு.க-வை வீழ்த்த முடியும் என்று ஜெயலலிதா நினைக்கிறார்" என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?

அ.தி.மு.க. அணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாறாமல் அங்கம் வகிக்கிறது ம.தி.மு.க. அடுத்ததாக இணைந்துகொண்டன இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள். இத்துடன் தி.மு.க-வின் கோபங்களுக்கு ஆளான பா.ம.க-வையும் இணைத்தால், வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அனைத்துக்கும் மேலாக, கருணாநிதியைத் திட்டுவதற்காகவே கட்சி நடத்திக்கொண்டு இருக்கும் விஜயகாந்த்தைத் தனியாகவிடுவது நல்லது அல்ல என்றும் அ.தி.மு.க. நலம் விரும்பிகள் நினைக்கிறார்கள். ஒரே மேடையில் ஜெயலலிதா, விஜயகாந்த், ராமதாஸ், வைகோ, தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை கருணாநிதிக்கு எதிராக உட்காரவைப்பது மட்டுமே, வெற்றிச் சூத்திரம் என்பது ஜெயலலிதாவின் திட்டம்.

இதற்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் இந்தக் கூட்டணிக்கு வெளியே இருக்கிற விஜயகாந்த், ராமதாஸ் ஆகிய இருவருடனும் அ.தி.மு.க. சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. இவை அதிகாரபூர்வமாகவே நடக்கின்றன. "இந்தத் தேர்தலில் நான் யார் என்று கருணாநிதிக்குக் காட்டுகிறேன்" என்று தனது சகாக்களிடம் சொல்லி வரும் ராமதாஸ், "விஜயகாந்த் தனது முடிவை வெளியிட்ட பிறகுதான், என்னால் எதையும் உறுதியாகச் சொல்ல முடியும்" என்று சொல்கிறாராம். பொதுவாகவே, அவர் "பா.ம.க. இருக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்" என்பார். ஜெயா ப்ளஸ் கேப்டன் என்பது வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்பது ராமதாஸின் கணிப்பு.

விஜயகாந்த்தைப் பொறுத்தவரை அவர், 'குடி' பேச்சுக்குப் பிறகு அ.தி.மு.க-வை அவ்வளவாகத் தாக்கவில்லை. 'தி.மு.க-வை மறுபடியும் ஆட்சிக்கு வரவிடக் கூடாது' என்பதுதான் அவரது பிரசாரமாக இருக்கிறது. கருணாநிதி மீதான அவரது கோபங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் இருக்கின்றன. மேலும், 'தனித்து நிற்பது இனி தற்கொலைக்குச் சமானமானது' என்று அவர் நினைக்க ஆரம்பித்துவிட்டார். இந்தத் தேர்தலில் கணிசமான எம்.எல்.ஏ-க்களைச் சபைக்குள் அனுப்பாமல் போனால், கட்சியே கரைந்து போய்விடும் என்றும் தெரியும். அவர் ஆரம்பத்தில் அதிகம் எதிர்பார்த்தது காங்கிரஸ் கட்சியைத்தான். ஆனால், அவர்கள் தி.மு.க-வை விட்டு அசைவதாகத் தெரியவில்லை என்ற கோபம் விஜயகாந்த்துக்கு. கடந்த வாரம் திருப்பூரில் பேசிய விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஊழல்களையும் கண் சிவக்கத் திட்ட ஆரம்பித்திருப்பதன் பின்னணியை அ.தி.மு.க. அதிகமாகவே வரவேற்கிறது. போயஸ் தரப்பில் இருந்து தூது செல்லும் புறாக்களுக்கு அதிக மரியாதை கொடுத்தே தே.மு.தி.க தரப்பு பேசி வருகிறது. "எத்தனை ஸீட் என்பதைவிட, எங்கள் அணியில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்" என்று உத்திரவாதம் அம்மா ஆட்களால் கேட்கப்பட்டதற்கு, அவர் மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை.

"அநேகமாக கேப்டன் - ஜெயா கூட்டணி இறுதியாகும் கட்டத்தை நெருங்கி வருகிறது" என்று சொல்லும் தூதுக் குழுவினர் சில கணக்குகளையும் மெள்ள அவிழ்க்கிறார்கள்.

யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?

"அம்மாவின் மேஜையில் தோராயமான ஒரு கணக்கு இருக்கிறது. 135 இடங்களுக்குக் குறைவாக அ.தி.மு.க. நிற்க முடியாது. 50 தொகுதிகளுக்கு மேல் விஜயகாந்த் எதிர்பார்த்தாலும் மற்ற கட்சிகளும் இருப்பதால், அவருக்கு 41 தொகுதிகள் வரை ஒதுக்கலாம். ராமதாஸுக்கு 23 இடங்களும், வைகோவுக்கு 21 இடங்களும் தரப்படும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 6 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 இடங்களையும் வாங்கும். மீதி இருக்கும் 3 இடங்கள் மற்ற கட்சிகளுக்குப் பிரித்து வழங்கப்படும் என்பது மாதிரியான முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டுஉள்ளது. கடந்த முறை வைகோ 35 இடங்களில் நின்றார். ஆனால், அப்போது வேறு கட்சிகள் எதுவும் கூட்டணியில் இல்லை. இன்று பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. அதேபோல் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் கொஞ்சம் குறையவே செய்யும். இதை அனைத்துத் தரப்பினரும் அனுசரித்தாக வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது" என்கிறார் கள்.

'30 டன் எடைகொண்ட லாரியைத் தாங்கும் அளவுக்குப் பலம்கொண்டது அந்தப் பாலம். ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு அந்த லாரி வந்துகொண்டு இருந்தபோது, திடீரென 10 புறாக்கள் வந்து உட்கார்ந்தன. இதனால், பாரம் தாங்காமல் பாலம் உடைந்துவிடுமோ என்று நினைத்து அனைவரும் பதறிப் போனார்கள். ஆனால்,

யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?

பிரச்னை இல்லாமல் லாரி வந்து சேர்ந்தது. புறா உட்கார்ந்ததால் எடை கூடி இருக்கும் என்பது உண்மைதான். ஆனால், லாரி ஓடிக்கொண்டு இருந்ததால் டீசல் குறைந்துகொண்டே போனதால் சரிக்குச் சரியாகிவிட்டது' - இது மதுரையில் ஜெ. சொன்ன கதை. இதைப் போன்றதே தனது கணக்கும் என்கிறார் அவர். இதில் புறா யார், டீசல் எது என்பது தெரிந்துவிட்டது. ஆனால், அளவுதான் தெரியவில்லை.

இதை அனைவரும் ஏற்றுக்கொண்டால், அதுவே ஜெயிக்கும் லிஸ்ட்! ஆனால், கூட்டணிக் கட்சிகள் ஜெயலலிதாவிடம் எதிர்பார்ப்பது கதைகளை அல்ல. மரியாதையான ஸீட்டுகளை. எப்போதுமே புது விருந்தாளிகளுக்குப் படைத்துவிட்டு, பழையவர்களுக்குப் பட்டினி போடுவது அரசியல் சூத்திரமாக மாறினால், சிக்கல் என்னமோ... ஜெ-வுக்கு மட்டும்தான்!

யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?
யாருக்கு எத்தனை ஸுட்? ஜெயிக்குமா ஜெ. லிஸ்ட்?