Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆசிரியர்
தலையங்கம்
தலையங்கம்

தேர்தல் வன்முறைகளுக்குப் பிரபலமான மாநிலம் பீகார். இப்போதோ மாவோயிஸ்ட்டுகளின் துப்பாக்கிச் சத்தமும் கூடுதலாகவே கேட்கும் நேரம். ஆள்வோருக்கு எதிராக ஆயுதச் சவால் விடுக்கும் மாவோயிஸ்ட்டுகள், பீகார் மாநில சட்டசபைத் தேர்தல் களத்திலும் தங்கள் மிரட்டலை விடுக்கத் தவறவில்லை!

வெள்ளி அன்று முதல் கட்ட வாக்குப் பதிவு துவங்குவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்புகூட, கண்ணி வெடி மூலம் ஆறு போலீஸாரின் உயிர்களைப் பறித்தனர். தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, வாக்குச் சாவடிகளிலேயே எச்சரிக்கைப் பிரசுரங்களை ஒட்டினர். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எரித்த செயலும் நடந்தது.

அதை எல்லாம் மீறி முதல் கட்ட வாக்குப் பதிவு நன்றாகவே நடந்தது. இரண்டாம் கட்டத் தேர்தலின்போது... அதைவிடவும் ஆர்வத்தோடு மிக நீண்ட வரிசைகளில் காத்திருந்து, தங்கள் ஜனநாயகக் கடமையைச் செவ்வனே நிறைவேற்றினர் பீகார் வாக்காளர்கள். ஒரு சில இடங்களில் 62 சதவிகிதம் வரைகூட வாக்குகள் பதிவாகின!

இந்த தேசத்தின் அதிகார மையங்களைக் கட்டி ஆளும் அத்தனை பெரிய மனிதர்களுக்கும், உரத்த குரலில் முக்கியமான ஒரு சேதியைச் சொல்லி இருக்கிறார்கள் இந்த வாக்காளர்கள்.

'சாதிப் பாகுபாடு, சுயநலச் செயல்பாடு, ஊழல், வன்முறை, அதிகாரத் துஷ்பிரயோகம் என்று எத்தனைதான் அருவருப்பான முகங்களை அதிகாரத்தில் இருப்போர் காட்டினாலும்... எங்கள் உயிரினும் மேலான வாக்குரிமையை நிலைநாட்டிக் காட்டியதன் காரணம், ஜனநாயக அரசியல் அமைப்பின் மீது எங்களுக்கு இப்போதும் தளராமல் உள்ள நம்பிக்கைதான்!'

ஆள், அம்பு, அதிகார வட்டங்களின் பாதுகாப்போடு மட்டுமே கடமை ஆற்றும் பல அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், பாதுகாக்க யாருமற்ற நிராயுதபாணிகளாக வந்து நின்று, தங்கள் ஓட்டைக் கொடுத்திருக்கும் இந்த மக்கள்தானே இந்த தேசத்தின் நிஜமான பாதுகாவலர்கள்!

தலையங்கம்
தலையங்கம்