Published:Updated:

டெல்லி திரும்பினார் சோனியா காந்தி!

Vikatan Correspondent
டெல்லி திரும்பினார் சோனியா காந்தி!
டெல்லி திரும்பினார் சோனியா காந்தி!

புதுடெல்லி, செப்.8,2011

டெல்லி திரும்பினார் சோனியா காந்தி!

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை டெல்லி திரும்பினார். ##~~##

"காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று காலை டெல்லி திரும்பினார். அவர் நலமுடன் இருக்கிறார்," என்றார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் த்விவேதி.

முன்னதாக, கடந்த மாதம் 2-ம் தேதி அமெரிக்கா சென்ற சோனியா காந்தி, அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவைசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அவருக்கு என்ன நோய், எந்த வகையான அறுவைசிகிச்சை என்பன உள்ளிட்ட விவரங்களை காங்கிரஸ் வெளியிடவில்லை.

சோனியா டெல்லி திரும்பும் வரை கட்சிப் பணிகளை ராகுல் காந்தி, ஏ.கே.அந்தோணி, அகமது படேல் மற்றும் த்விவேதி ஆகியோர் கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.