
பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு பதிலாக புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா உள்பட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த வழக்கில் தன்னையும் எதிர் தரப்பாக சேர்க்கக் கோரி திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை மாற்றக் கோரி அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்புக்கு சாதகமாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் செயல்பட வாய்ப்புள்ளது என்றும், பவானி சிங்குக்கு பதில் தகுதி வாய்ந்த புதிய அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மனு ஓரிரு நாளில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.