Published:Updated:

அமளியால் 50 மணி நேரம் வீணானது: மீராகுமார்

Vikatan Correspondent
அமளியால் 50 மணி நேரம் வீணானது: மீராகுமார்
அமளியால் 50 மணி நேரம் வீணானது: மீராகுமார்

புதுடெல்லி, செப்.8,2011

அமளியால் 50 மணி நேரம் வீணானது: மீராகுமார்

பல்வேறு விவகாரங்களில் உறுப்பினர்களின் அமளி காரணமாக, மழைக்காலக் கூட்டத் தொடரில் 50 மணி நேரத்துக்கும் மேல் நேரம் வீணக்கப்பட்டதாக மக்களவைத் தலைவர் மீராகுமார் கூறினார். ##~~##

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் வாக்களிக்க லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தால் வியாழக்கிழமை இரு அவைகளிலும் கடுமையான அமளி ஏற்பட்டது. பின்னர், நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அவையை ஒத்திவைப்பதற்கு முன்பாக, நடப்பு கூட்டத் தொடர் குறித்து மக்களவைத் தலைவர் மீரா குமார் கூறுகையில், "மொத்தம் 104 மணி 3 நிமிடங்கள் நடந்த இந்தத் தொடரில், அமளியின் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டதால் 51 மணி 6 நிமிடங்கள் வீணானது கவலைக்குரியது," என்றார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், "அடுத்த கூட்டத் தொடரில் தேவையற்ற இடையூறுகளால் அவை நடவடிக்கைகள் பாதிக்காது நம்புகிறேன்," என்றார்.

இந்தத் தொடரில் 500 கேள்விகள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், அவற்றில் 51 கேள்விகளுக்கு மட்டுமே வாய்வழி பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சுஷ்மா, அத்வானி புறக்கணிப்பு...


கூட்டத் தொடர் நிறைவையொட்டி, மக்களவைத் தலைவர் இன்று அளித்த தேநீர் விருந்தை பிஜேபி மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் புறக்கணித்தனர்.

நாடாளுமன்றத்தில் வாக்குக்கு லஞ்சப் பணம் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து தாங்கள் இன்று எழுப்பிய குரலுக்கு மதிப்பு அளிக்கப்படாததால் அவர்கள் புறக்கணித்ததாக தெரிகிறது.