ஸ்பெஷல் -1
Published:Updated:

இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!

இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!


"இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!"
இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!
இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!
ரீ.சிவக்குமார்,ம.கா.செந்தில்குமார்
படம்:வி.செந்தில்குமார்
இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!

தவைத் தட்டியதும் 'யெஸ்!' என்று அனுமதிக்கிறது அந்த கம்பீரக் குரல். மெல்லிய

ஏ.சி ரீங்காரம் மட்டும் துணை இருக்க, அந்த அறையில் ஒற்றை ஆளாகத் தனித்து இருக்கிறார் ஏ.பி.பரதன். ஓர் அடாசுக் கட்சியின் மாவட்டச் செயலாளரே, பத்துப் பதினைந்து ஜால்ராக்கள் சூழ பந்தா செய்யும் தற்கால தமிழகச் சூழலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் அவ்வளவு எளிமையாக இருந்தது 'நம்பினால் நம்புங்கள்' அதிசயம்தான்! வங்கித் தொழிற்சங்கக் கூட்டத்துக்காக சென்னை வந்திருந்தவர், "ஓ.கே. பிரதர்ஸ்!" என்று நமது கேள்விகளை எதிர்கொண்டார்.

"அயோத்தி தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து?"

"ஒரு நீதிமன்ற நடைமுறை நடந்து முடிந்து இருக்கிறது. 1992, டிசம்பர் 6-ல் பாபர் மசூதி, சங் பரிவாரங்களால் இடிக்கப்பட்டதை ஒப்பிடும்போது, இப்போது மக்கள் காத்துள்ள அமைதி மகத்தானது. ஒட்டுமொத்த இந்தியாவும் அமைதி காத்து, எந்த ஒரு சிறு அசம்பாவிதத்துக்கும் இடம் அளிக்கவில்லை. முதலாவதாக, மக்களின் இந்த ஆக்கபூர்வமான அமைதிக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். இரண்டாவதாக, நீதிமன்றங்களின் தீர்ப்பு என்பது சட்டரீதியிலும் தர்க்கபூர்வமாகவும் அமைய வேண்டிய ஒன்று. ஆனால், இப்போது வந்து இருக்கும் தீர்ப்போ, நம்பிக்கைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக இந்தத் தீர்ப்பினால் முஸ்லிம்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இருந்தபோதும், சமூக அமைதியைக் காப்பதில் தங்கள் பங்கை அவர்கள் சிறப்பாக நிறுவி இருக்கிறார்கள். நம்பிக்கைகளின் அடிப்படையில் அமைந்த இந்தத் தீர்ப்பு என்னையும் தொந்தரவுக்கு உள்ளாக்கி இருக்கிறது. இது ஒரு தவறான வழிமுறை. எதிர்காலத்தில், சட்ட நடைமுறைகளை இது பாதிக்கக்கூடிய ஆபத்து உண்டு. ஆனால், பா.ஜ.க-வோ, விஸ்வ ஹிந்து பரிஷத்தோ கொண்டாடுவதற்கு இதில் எதுவும் இல்லை. ஏனென்றால், இது இறுதியான தீர்ப்பு இல்லை. நிச்சயமாக, படிப்படியான சட்ட நடைமுறைகளின் மூலம் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்!"

இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!

"இந்தியாவின் ஏழு மாநிலங்களில் மாவோயிஸ்ட்டுகள் வளர்ச்சி அடைந்து உள்ளதை எப்படிப் பார்க்கிறீர்கள்?"

"மாவோயிஸ்ட்டுகள் முதலில் இந்தியச் சூழலைப் புரிந்துகொள்ள வேண்டும். நிச்சயமாக இங்கு நிலவுவது முதலாளித்துவ ஜனநாயகம்தான். மத்திய அரசு முதலாளித் துவத்தைக் காப்பாற்றவே விரும்புகிறது. அதன் முடிவுகள் ஏழை மக்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. குறிப்பாக, புதிய பொருளாதாரக் கொள்கை, இயற்கை வளங்களைப் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஆகியவற்றால், ஆதிவாசி மக்கள் பாதிக்கவே செய்கின்றனர். ஆனால், இந்தியா சுதந்திர நாடு என்பதையும் அது பன்முகத்தன்மை கொண்டுள்ளது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தல்களில் பணபலம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்திய எம்.பி-க்களில் 300-க்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள்தான். ஆனால், இந்திய மக்கள் ஜன நாயகத்தின் மீது நம்பிக்கைவைத்து இருக்கிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். இந்த விஷயத்தைத்தான் மாவோயிஸ்ட்டுகள் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். மாவோயிஸ்ட்டுகளின்

ஆள் கடத்தல், தனி நபர் கொலைகள், கடத்தல் கொலைகள் ஆகியவை வன்மையாகக் கண்டிக்கத் தக்கவை. இவை நிச்சயம் புரட்சிக்கான வழி இல்லை. மாவோயிஸ்ட்டுகளால் கொல்லப்படுபவர்கள் அனைவரும் வர்க்க எதிரிகள் அல்ல; சாதாரண மக்களும் பரிதாபமாகப் பலியாகிறார்கள். ஒருபுறம் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறை என்றால், இன்னொருபுறம் அரச பயங்கரவாதமும் உள்ளது. மாவோயிஸ்ட்டுகள் தங்கள் செயல் பாடுகளின் மூலம் மக்களை அரச பயங்கரவாதத்துக்குள் சிக்கவைக்கிறார்கள். தங்களது வன்முறை மூலம் மாவோயிஸ்ட்டுகள் அரசின் கரங்களையே பலப்படுத்து கிறார்கள்!"

" 'உலகமயமாக்கலை எதிர்க்கும் இடதுசாரிகள், தாங்கள் ஆளும் மேற்கு வங்கத்திலும் அதே பொருளாதாரக் கொள்கைகளைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்' என்பதும் மாவோயிஸ்ட்டுகளின் குற்றச் சாட்டுகளுள் ஒன்று..."

"இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையை இந்திய அரசுதான் தீர்மானிக்கிறதே தவிர, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் அல்ல. ஒட்டுமொத்தமாக, இந்தியாவே உலகமயமாக்கலில் மூழ்கி இருக்கும்போது, மேற்கு வங்கத்தில் மட்டும் சோஷலிசத்தை அமல்படுத்திவிட முடியாது. ஆனால், இடது முன்னணி அரசு, அடித்தள மக்கள் பயன் அடையும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனாலும், தொழிற்சாலையைக் கொண்டுவருவது, அதற்கான நிலங்களை மக்களிடம் இருந்து பெறுவது போன்றவற்றில், இடது முன்னணி அரசு சில தவறுகளைச் செய்து இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான அரசின் விதிமுறைகள், காலனியக் காலத்தைச் சேர்ந்தவையாகவே இருப்பதும் பிரச்னைதான்!"

"மாவோயிஸ்ட்டுகள் பிரச்னைக்கான தீர்வாக எதை முன் வைக்கிறீர்கள்?"

"மாவோயிஸ்ட்டுகள் பிரச்னையைச் சட்டம் - ஒழுங்கு பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. அது ஒரு சமூகப் பிரச்னை. போலீஸைக் குவிப்பதாலோ, ராணுவத்தை இறக்குவதாலோ பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. சமூக, அரசியல், பொருளாதாரரீதியில்தான் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். மாவோயிஸ்ட்டுகளும் துப்பாக்கிகள் மீதான தங்கள் சாகசக் காதலை முறித்துக் கொண்டு, பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்!"

"தீவிரமாக காங்கிரஸை எதிர்க்கும் நீங்கள், தமிழகத்தில் தற்போது அ.தி.மு.க கூட்டணியில் இருக்கிறீர்கள். ஒருவேளை அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இங்கு அமைந்தால்?"

"நிச்சயமாக அங்கு இருக்க மாட்டோம். நடைபெற உள்ள பீகார் தேர்தல் தொடங்கி, இந்தியா முழுக்க எங்களது நிலைப்பாடு இதுதான். காங்கிரஸ் அரசும் அதன் பொருளாதாரக் கொள்கையும்தான் எங்கள் எதிரிகள்!"

"நீங்கள் இவ்வளவு அழுத்தமாகச் சொல்கிறீர்கள். ஆனால், ஜெயலலிதா காங்கிரஸ் கூட்டணியை விரும்புவதைப்போல் தெரிகிறதே?"

இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!

"அது மீடியாக்களின் விருப்பமே தவிர, ஜெயலலிதாவின் விருப்பம் அல்ல. ஜெயலலிதாவின் விருப்பத்தை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்!"

"தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க அல்லாத மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு இருக்கிறதா?"

"இப்போது எங்கள் முழு முதல் நோக்கம், தி.மு.க. அரசை அகற்றுவதுதான். தி.மு.க. ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ரவுடியிச அரசியல் வளர்ந்துவிட்டது. ஒருபுறம், மணல் மாஃபியாக்கள், இன் னொருபுறம், நில மாஃபியாக்கள். இதுதான் இப்போதைய தி.மு.க. ஆட்சி. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டிய ஆட்சி. மற்றவை எல்லாம் அதன் பிறகுதான்!"

இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!
இடதுசாரிகளும் தவறு செய்திருக்கிறார்கள்!