Published:Updated:

கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு

கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு

பிரீமியம் ஸ்டோரி

நீ பாதி.. நான் பாதி... கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு!
கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு
கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு
ப.திருமாவேலன்
படங்கள் : சு.குமரேசன்
கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு

ளிமைக்கு உதாரணமாக இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த தலைவர்களில் ஒருவரான

முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு நூற்றாண்டு விழாவை எப்படிக் கொண்டாடலாம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

"கக்கனைப் பெருமைப்படுத்தும் இந்த விழாவில், சோனியா அம்மா கலந்து கொள்ள வேண்டும். அதுதான் கக்கனுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய கௌரவம்" என்று ஒரு பிரமுகர் பேசினார். அடுத்துப் பேச வந்த 'காங்கிரஸ் கந்தகப் புயல்' ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "சோனியா அம்மையார்கூட அதற்கு வர வேண்டியது இல்லை. இங்கே தனித் தனி தீவுகளாக இருக்கும் தலைவர்கள் அந்த மேடைக்கு வந்தால் போதும். சிதம்பரமும் வாசனும் வந்தாலே, கக்கனுக்குப் பெருமைதான்" என்றார். சொன்னது மாதிரியே மதுரையில் காங்கிரஸ் விழா நடந்து முடிந்தது.

கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு

காங்கிரஸ் கட்சி தனிப் பாதையில் பயணிக்கப் போவதற்கான அறிகுறிகள் அந்த மேடையில் அதிக மாகவே தெரிந்தன. விழாவில் பேசிய தலைவர்கள் அனைவரும் கக்கனைப் புகழ்ந்து பேசுவதைவிட, வேறு ஒரு விஷயத்தைத்தான் சுட்டிக்காட்டி இருக்கி றார்கள். காங்கிரஸ் கட்சி அரை நூற்றாண்டு கால மாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வழி இல் லாமல் புறக்கடையில் ஒதுக்கப்பட்டு இருப்பதற்கான புலம்பலே நிறையக் கேட்டது. 'அடுத்து யாருக்கும் பல்லக்குத் தூக்காமல் தனித்து நின்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும்' என்று தங்களது எண்ணத்தைத் தொண்டர்கள் கனத்த ஆர்ப்பாட்டங்களுடன் சொன்னார்கள். 'யாரும் அதைப்பற்றிப் பேசக் கூடாது' என்று தங்கபாலு தர்மசங்கடத்துடன் நெளிந்தாரே தவிர, தொண்டர் களின் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. தமிழக உளவுத் துறை போலீஸுக்கு இணையாக மத்திய உளவுத் துறையும் இந்தக் காட்சிகளைக் கூர்ந்து கவனித்திருக்கிறது. 'டெல்லி மேலிடத்துக்கு இந்தக் கூட்டம் தொடர்பாக அனுப்பிவைக்கப்பட்ட தக வல்கள் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை மொத் தமாக மாற்றி அமைக்க அடித்தளம் அமைத்திருக்கிறது' என்று காங்கிரஸ் மேல்மட்டத் தலைவர்கள் மத்தி யில் சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு காங்கிரஸை ரகசிய கேமரா மூலமாக ஏ டு இசட் கவனிப்பவராக ராகுல் காந்தி இருக்கி றார். கக்கன் விழா மேடைக்கு வந்த தலைவர் களைக்கூட அவர் நம்பவில்லை. தனியாக இதற்கென ஒரு டீம் டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலேயே அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ராகுல் இட்டுள்ள கட்டளை, "தமிழ் நாடு தொடர்பான எந்தச் செய்தியும் எனக்குத் தணிக்கை இல்லாமல் வந்தாக வேண்டும்" என்பது தான். "காங்கிரஸ் கட்சியின் மரியாதையை அகில இந்திய அளவில் உயர்த்த வேண்டுமானால், தமிழ் நாடு, உத்தரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங் களில் அது ஆளும் கட்சியாக ஆக வேண்டும். தென் மாநிலங்களில் தமிழ்நாடும், வட மாநிலங்களில் உ.பி-யும்தான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்கள். இரண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆரம்ப காலத்தில் அசைக்க முடியாத தூணாக இருந்தவை. ஆனால், இந்த இரண்டிலும் காங்கிரஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதை மாற்றி அமைக்க வேண்டும்" என்று ராகுல் காந்தி நினைக்கிறார்.

கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு

தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க-வுடன் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் கை கோத்துக் கொண்டு உள்ளது. அதை வெட்டிவிட சோனியா விரும்பவில்லை என்பதுதான் உண்மை. அம்மாவின் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளும் ராகுல், "தி.மு.க. உறவை முறிக்க வேண்டாம். ஆனால், நமக்கு மரி யாதை தரும் வகையில் அது இருக்க வேண்டும். மத்திய அரசில் தி.மு.க. எதிர்பார்க்கும் எண்ணிக் கையில் நாம் கேபினெட் அமைச்சர்கள் பதவிகளைக் கொடுத்தோம். அதைப்போல நாமும் கேட்க உரிமை இருக்கிறது. தி.மு.க-வுக்கு மிக முக்கிய பல மாக இருக்கிற காங்கிரஸ் கட்சிக்கு 50 சதவிகித இடங்கள், அதாவது 115 இடங்கள் வரை நமக்கு தர வேண்டும் என்று கோரிக்கை வைப்போம்" என்று ராகுல் காந்தி கணக்குப் போட்டு வைத்திருக் கிறார். ஏற்கெனவே, 1980 தேர்தலில் காங்கிரஸும் தி.மு.க-வும் கூட்டணிவைத்து இதே போன்ற எண் ணிக்கைப் பங்கீடு நடந்திருக்கும் முன்னுதார ணத்தையும் இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள் இளைஞர் காங்கிரஸ் புள்ளிகள். தமிழ்நாட்டு மேடைகளில் இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் இதைத் தெரிந்துகொண்டுதான் பேசி வருகிறார்கள்.

இப்படி 50 சதவிகித இடங்களைப் பெற்றுப் போட்டியிடும்போது, தேர்தல் முடிவுகள் காங்கி ரஸுக்குக் கணிசமான இடங்களில் வெற்றிவாய்ப்பைக் கொடுத்தால், சில கட்சிகளை இணைத்துக்கொண்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்கும் நோக் கத்துடன்தான் என்பது புரியாத விஷயம் அல்ல.

ராகுல் - தி.மு.க. லடாய் என்று நினைப்பவர்கள்கூட, காங்கிரஸ் கட்சியை அ.தி.மு.க. கூட்டணியில் கொண்டுபோய்ச் சேர்க்க ராகுல் நினைப்பதாக தவ றாகக் கருதுகிறார்கள். ராகுலின் நோக்கம் அதுவல்ல. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பழைய எம்.ஜி.ஆர். ஃபார்முலாபடி 62 இடங்களை வாங்கிக்கொண்டு அ.தி.மு.க-வின் தொங்குசதையாக மாற ராகுல் நினைக்கவில்லை. ஒருவேளை அ.தி. மு.க. அணியுடன் பேச்சு நடத்தினாலும், இதே '50-க்கு 50' பார்முலாவைத்தான் ராகுல் வைப்பார். ஆனால், அதற்கு ஜெயலலிதா சம்மதிக்க மாட்டார். 60 முதல் 70 இடங்கள் வரை வாங்கித் தருகிறோம் என்று அ.தி.மு.க. சார்பில் பேசுபவர்கள் டெல்லியின் கவனத்துக்கு சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

ராகுலின் கணக்கை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு பெரிய கட்சிகளும் நிராகரிக்கும் பட்சத்தில் விஜயகாந்த் பக்கமாக ராகுல் பார்வை பதிந்துள்ளது. சமீபத்தில் மூன்று நாட்கள் தமிழக அரசியல் விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடிய ராகுல், விஜயகாந்த் பற்றி ஆர்வத்துடன் விசாரித்தது இதற்காகத்தான். யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை அறிவிக்காமல் கூட்டணி அமைப்பது இவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளும் ஐடியாவாக இருக்கிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் பேச வந்தபோது, "நீங்கள் முதலில் தி.மு.க. அணியில் இருந்து வெளியே வாருங்கள். அதன் பிறகு நான் உங்களுடன் பேசுகிறேன்" என்று விஜயகாந்த் கறா ராகக் கூறியிருக்கிறார். "நாம் இருவரும் இணைந்த பிறகு, மற்ற கட்சிகளைச் சேர்ப்பது குறித்து யோசிக் கலாம்" என்றும் அவர் சொன்னதாகக் கூறப் படுகிறது.

கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு

இப்படி, எதைத் தூக்கி எதில் போட்டால் காங்கிரஸுக்கு விமோசனம் கிடைக்கும் என்ற நோக் கத்துடன் கணக்குப் போட்டு வருகிறார் ராகுல். "டெல்லியில் இன்று இருக்கும் ஆட்சிக்கு ஆபத்து இல்லாத வகையில் எந்தக் காரியத்தையும் செய்" என்று சோனியாவும் இதற்கு பச்சைக் கொடி காட்டி இருப்பதாக ராகுலைச் சந்தித்துவிட்டு வரும் இள வட்டங்கள் சொல்கிறார்கள். ஒன்றை அடைத்தால் இன்னொன்று உடைப்பு எடுப்பதைப்போல, கருணாநிதியை இந்தத் தகவல்கள் கலக்கமடைய வைத்துள்ளன.

கலக்கம், கலவரமாக ஆகக்கூடிய காலம்நெருங்கிக் கொண்டு இருக்கிறது!

கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு
கருணாநிதியைக் கலக்கும் ராகுல் கணக்கு
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு