Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தலையங்கம்

தமிழ்த் தடம்!

ளிமண், கல்வெட்டு, ஓலை, காகிதம் தாண்டி கணினியிலும் பட்டொளி வீசிப் பறக்கும் தமிழ்க் கொடியை இன்னும் உயரே தூக்கிப் பிடிக்கும் நோக்கில், கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது!

தலையங்கம்

குடும்ப ஆதிக்கம், தனிநபர் புகழ்ச்சி, அளவு தாண்டிய செலவு, அரசு இயந்திரக் குவிப்பு என்று எழும் விமர்சனங்களில் அர்த்தங்கள் இருக்கவே செய்கின்றன. 'சொந்தப் பணத்தைச் செலவு செய்யும்போது சிக்கனமாக இரு. பொதுப் பணத்தைச் செலவு செய்யும்போது கஞ்சனாக இரு' என்பது பொது வாழ்க்கையின் இலக்கணங்களில் ஒன்று. ஐந்து நாட்களுக்காகச் செலவான கோடிகளைக் கூட்டிப்பார்த்தால், அதில் வீண் விரயம் எவ்வளவு என்பது ஆட்சியாளர்களுக்குப் புரியும்.

இன்னொரு பக்கம்... தமிழுக்கு ஆறுதலான சில செய்திகளும் கிடைத்திருக்கின்றன. 'தமிழிலேயே பாடம் படித்தால், தமிழக அரசுப் பணிகளில் முன்னுரிமை' என்று ஒதுக்கீடு செய்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. 'தமிழுக்கு மதிப்பளித்து அதையே முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்களுக்கு என்ன நன்மை கிடைத்தது?' என்று இனி யாரும் கேள்வி கேட்க முடியாத அளவுக்கு ஆறுதலான அறிவிப்பு.

அச்சுத் துறையில் கணினித் தமிழை உலகளாவ ஒருமுகப்படுத்தும் விதமாக, 'யூனிகோட்' மற்றும் 'டிஏசிஇ-16' ஆகியவற்றை ஆரத் தழுவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் அனைவரும் ஒரே எழுத்துருவில் படிக்கலாம் இனி!

தமிழுக்கு இவை மட்டும் போதுமா? 'அனைத்து நிலைகளிலும் தமிழ்' அமைவதற்கான காரியங்களில் தமிழக அரசு இறங்கியாக வேண்டும். அதற்கான முதல் அடியாக இந்த கோவை மாநாட்டை அரசு கருத வேண்டும். கூடிக் குலவையிட்டுக் கலையும் வெறும் திருவிழாவாக நாங்கள் இதை நடத்தவில்லை, தமிழைப்போலவே இம்மாநாட்டையும் காலத்தால் அழியாத ஒன்றாகத் தடம் பதிப்போம் என்று அரசு நினைக்குமானால், இன்னும் செல்வதற்கும் செய்வதற்கும் எவ்வளவோ இருக்கின்றன!

தலையங்கம்
தலையங்கம்