Published:Updated:

கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட தயார்: கிரண்பேடி அறிவிப்பு!

Vikatan Correspondent
கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட தயார்: கிரண்பேடி அறிவிப்பு!
கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட தயார்: கிரண்பேடி அறிவிப்பு!
கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட தயார்: கிரண்பேடி அறிவிப்பு!

புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் போட்டியிட தயார் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வந்த இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியான கிரண்பேடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் டெல்லி பா.ஜ.க. தலைவர் ஹர்ஷ் வர்த்தன் ஆகியோர் முன்னிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தலைமை நிலையத்தில் பா.ஜ.க.வில் இணைந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கிரண்பேடி அளித்துள்ள பேட்டியில், ''பா.ஜ.க. தலைமை அனுமதித்தால், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் மத்திய டெல்லி சட்டசபை தொகுதியில் அவரை எதிர்த்து நிச்சயம் போட்டியிடுவேன்" என்று கூறியுள்ளார்.