Published:Updated:

77 வயது அமைச்சர் 24 வயது நர்ஸை மணந்தார்: முதல்வர் நேரில் வாழ்த்து!

Vikatan Correspondent
77 வயது அமைச்சர் 24 வயது நர்ஸை மணந்தார்: முதல்வர் நேரில் வாழ்த்து!
77 வயது அமைச்சர் 24 வயது நர்ஸை மணந்தார்: முதல்வர் நேரில் வாழ்த்து!
77 வயது அமைச்சர் 24 வயது நர்ஸை மணந்தார்: முதல்வர் நேரில் வாழ்த்து!

இம்பால்:  77 வயதுடைய மணிப்பூர் அமைச்சர் ஒருவர் 24 வயதுடைய
நர்ஸை மணந்து கொண்டுள்ளார். இந்த தம்பதியை அம்மாநில முதல்வர் நேரில் வாழ்த்தியுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக 77 வயதான புங்ஜதாங் உள்ளார். இவர் அம்மாநில முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் ஆவார். பழங்குடியினத்தை சேர்ந்த புங்ஜதாங், நீண்ட காலமாக மணிப்பூரில் அமைச்சராக உள்ளார்.

இவருக்கு திருமணமாகி 5 குழந்தைகள் உள்ளன. கடந்த 2011 ஆம் ஆண்டு அமைச்சர் புங்ஜதாங் மனைவி நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார். குழந்தைகளும் திருமணமாகி தனித் தனியாக சென்று விட்டனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வரும் அமைச்சர் புங்ஜதாங்கின் சொந்த வாழ்க்கையை கவனிக்க அவருக்கு பெண் துணை தேவைப்பட்டது.

இதையடுத்து, அவரது சொந்த ஊரான சுரசந்பூரை சேர்ந்த நர்சிங் படித்து முடித்த 24 வயது இளம்பெண் தங்னகை சங்கை திருமணம் செய்ய இருதரப்பினரும் பேசி முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் சொந்த ஊரில் அமைச்சர் புங்ஜதாங் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில், முதல்வர் ஒக்ராம் மற்றும் அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.