Published:Updated:

உள்நாட்டு விமான சேவை தொடங்க கேரள அரசு முடிவு!

Vikatan Correspondent
உள்நாட்டு விமான சேவை  தொடங்க  கேரள அரசு முடிவு!
உள்நாட்டு விமான சேவை தொடங்க கேரள அரசு முடிவு!
உள்நாட்டு விமான சேவை  தொடங்க  கேரள அரசு முடிவு!

திருவனந்தபுரம்: ஏர் கேரளா என்ற உள்நாட்டு விமான சேவையைத் தொடங்க   கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக   அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் கேரள மக்களுடன் நேரடியாக பேசும் குளோபல் என்.ஆர்.கே. சந்திப்பு   கொச்சியில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள்,  சவூதி உள்ளிட்ட அரபு  நாடுகளில் வாழ்ந்து வரும் கேரள மக்கள் சார்பாக விமான கட்டணங்களில் மானியம் வழங்க வேண்டும் என்று கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதிலளித்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி விரைவில் ஏர் கேரளா என்ற பெயரில் உள்நாட்டு விமான சேவை  விரைவில் தொடங்கப்படும் என்றும் இது தொடர்பாக மத்திய அரசு அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.