Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்


தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆசிரியர்
தலையங்கம்

அரசு உஷார்!

தலையங்கம்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, முழு அடைப்பு: இயல்பு நிலை பாதிப்பு. ஊதிய உயர்வு உடன்படிக்கையை நிறைவேற்றக் கோரி, நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்! வழக்கறிஞர்கள் மீதான தொடர் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுதும் கோர்ட் புறக்கணிப்பால், நீதிமன்றத்தை நாடும் பொதுமக்களுக்கு அவதி. ஆளும் கட்சியின் அணுகுமுறையைக் கண்டித்து ஊடகத்தில் கருத்து வெளியிட்ட எதிர்க் கட்சிப் பிரமுகர் மீது வீடு புகுந்து தாக்குதல்... இப்படி பொதுவாழ்க்கை நிலவரம் கலவரமாக இருக்கிறது.

'அமைதிப் பூங்கா' என்றும், 'தொழிலாளர் உறவில் தனிச் சிறப்பு பெற்ற மாநிலம்' என்றும் தமிழகம் சம்பாதித்த நற்பெயர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்படுகின்றன.

சில காலம் முன்புதான் கோவை தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்களே அதிகாரியை அடித்துக் கொன்ற கோரச் சம்பவம் அரங்கேறியது. சென்னையை அடுத்திருக்கும் கார் தொழிற்சாலையின் உள்ளே போலீஸார் புகுந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டிய அளவுக்கு வேலை நிறுத்தம்.

உலகமே திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன், ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் கோவை பக்கம் திருப்பி, செம்மொழி மாநாடு கொண்டாடுவதில் 'திறமை' காட்டிய அரசு இது. இலவச வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டி வழங்கும் விழா முதல் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா வரையில் ஆள்வோர் கலந்துகொண்டால், பிரமாண்டமான கூட்டம் கூட்டுவதிலும் 'வல்லமை'கொண்ட அரசு இது.

திரைத் துறை விழாக்கள் சீரும் சிறப்புமாக நடப்பதற்காக, எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் செலவிட முதல்வரே 'துடிப்பு'டன் தயாராக இருக்கும் அரசு இது. மத்திய அரசில் கூட்டணியாக இருந்துகொண்டு தாங்கள் இஷ்டப்பட்டதை எல்லாம் சாதிக்கும் 'சாமர்த்தியம்'கொண்ட அரசு இது.

மேற்சொன்ன அவலங்களுக்கு முடிவுகட்டவும், கொஞ்சம் நேரத்தையும் சாதுர்யத்தையும் பயன்படுத்தினால்தான் என்ன?

தலையங்கம்
தலையங்கம்