Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:

தலையங்கம்  
ஆசிரியர்  
தடம் புரண்ட அரசியல்!
தலையங்கம்
தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தலையங்கம்
தலையங்கம்

மேற்கு வங்காளத்தில் 'குண்டு வெடித்ததால்' தடம் புரண்ட பயணிகள் ரயிலின் மீது சரக்கு ரயில் ஒன்றும் மோதித்தள்ள... பரிதாபமாகப் பறந்திருக்கின்றன 150-க்கும் மேற்பட்ட உயிர்கள். காவல் துறை, ரயில்வே காவல் துறை, சி.பி.ஐ, விசாரணை கமிஷன் என்று அடுத்தடுத்த விசாரணைகளுக்கெல்லாம் 'வேலையே வைக்காமல்' முந்திக்கொண்டு முதல் தகவல் அறிக்கை கொடுத்திருக்கிறார் ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி - 'இந்த விபத்து ஓர் அரசியல் சதி' என்று!

உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில், தன் நிர்வாகத் திறன் மீது களங்கம் ஏற்படுத்தி... அதன் மூலம் தன் கட்சிக்குப் பின்னடைவு ஏற்படுத்தவே இந்த விபத்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது என்பதுதான் அமைச்சரின் அதிரவைக்கும் அவசரத் தீர்ப்பு!

விபத்து சோகத்தால் மக்களுக்குக் கிளம்பும் 'வெறுப்பு அலை'களைத் தங்கள் கட்சிக்கு எதிராகத் திருப்பிவிடுகிற கேவலமான தந்திரமே இது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்!

இத்தனைக்கும் நடுவே, 'மாவோயிஸ்ட்டுகள்' பற்றிய பேச்சே அமுங்கிவிட்டது. என்ன கொடுமை இது?

ஐம்பதுகளில் அரியலூர் ரயில் விபத்து நடந்தபோது, பறிபோன உயிர்களுக்காக அன்றைய மத்திய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி துடிதுடித்து வருந்தினார். யாரும் வற்புறுத்தாமலே தன் பதவியைத் தானாக ராஜினாமா செய்தார். பிறகு, இந்தத் தேசத்தின் பிரதமர் பதவியில் அமர்ந்தபோதும் அதே அரசியல் கண்ணியத்தைக் கடைசி வரை கட்டிக்காத்தார். அதனால்தான், எந்த விளம்பர முயற்சிகளும் இல்லாமலே இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் வரலாற்றின் பக்கங்களில் உதாரண மனிதராக ஜொலிக்கிறார் அவர்!

இன்றைய தலைவர்களே... கடமையைத் தட்டிக்கழித்து, உங்கள் பொறுப்புகளை ஏற்க மறுத்தால், நாளைய வரலாற்றில் கறுப்புப் புள்ளிகளாகத்தான் மிஞ்சுவோம் என்பதை, ஏன் மறந்துபோனீர்கள்?

தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism