Published:Updated:

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

தலையங்கம்

Published:Updated:

தலையங்கம்
தலையங்கம்
தலையங்கம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆசிரியர்
தலையங்கம்

இதற்கு பெயரும் உயிர் பிச்சை

தலையங்கம்

கொளுத்தும் வெயிலில், நடைபாதையில், வெறும் தரையில், பச்சிளம் குழந்தையைப் போட்டு பிச்சை கேட்கிற அவலக் காட்சிகள் இந்தியாவின் பெரு நகரங்களில் சாதாரணம்!

26 வருடங்களுக்கு முன்பு, போபாலின் யூனியன் கார்பைடு தொழிற்சாலைக்குள் இருந்து கசிந்து வந்த விஷ வாயுவுக்கு ஆயிரமாயிரம் உயிர்களைப் பறிகொடுத்தனர். அதற்குப் பிறகு பிறந்தவர்களும்கூட ஊனத்தோடு உயிர்வதையை அனுபவிக்கும் அவலம். அதற்கான நஷ்ட ஈட்டைப் பெறுவதற்கு அந்த அமெரிக்க நிறுவனத்தோடு நம் அரசாங்கம் நடத்திய பலவீனமான போராட்டத்தையும் ஒரு பிச்சைக்கே ஒப்பிடலாம்!

கோடிக்கணக்கில் எதற்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்ற கெடுமதியோடு, இந்திய உயிர்களைத் துச்சமாகவே மதித்த அந்த அமெரிக்க நிறுவனத்தின் தவறுகளை சட்டத்தின் முன்வைத்து வாதிடுவதில் நம் அரசாங்கம் போதிய கடுமையும் வேண்டிய சட்ட நுணுக்கமும் செலுத்தவில்லை என்று இன்று வரை குமுறல்கள் உண்டு.

'விபத்தைப் பார்வையிடுகிறேன்' என்று இந்தியாவுக்கு வந்து... கைதாகி... உடனே ஜாமீனில் வெளியேறி... சட்டென்று விமானத்தில் ஏறி அமெரிக்காவுக்கே தப்பிப் போனான் அந்த நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த வாரன் ஆண்டர்ஸன். கால் நூற்றாண்டு தாண்டியும் அவனை இங்கே கொண்டுவந்து நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. இதோ, 'போபால் பயங்கரத்துக்கு எட்டு பேர் பொறுப்பாளிகள்' என்று இப்போது வெளியாகியுள்ள உள்ளூர் நீதிமன்றத் தீர்ப்பிலும்கூட, ஆண்டர்ஸன் பெயர் இல்லை.

'குற்றவாளிகள்' என்று முடிவாகி இருப்பவர்களுக்கும் தண்டனை, இரண்டாண்டு சிறையும் சொற்ப அபராதமும்தானாம்!
நாட்டில் விலைவாசி ஏறிவிட்டதாக உரத்துக் கூவுகிற குருடர்களே... இந்தியாவைவிட மலிவாக உயிர்கள் வேறு எங்கே கிடைக்கும்

தலையங்கம்
தலையங்கம்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism