Published:Updated:

சி.பி.ஐ. வழக்கமாகவே செயல்படுகிறது: கருணாநிதி

Vikatan Correspondent

சென்னை, டிச.20,2010

2ஜி விவகாரத்தில் சி.பி.ஐ. வழக்கமான விசாரணையையே மேற்கொண்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ##~~##

ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது பற்றி, நிருபர்கள் கேட்டதற்கு, "சி.பி.ஐ. வழக்கமான பணிகளையே செய்து வருகிறது. இது நடைமுறைதான்," என்றார் முதல்வர் கருணாநிதி.

இந்த நடவடிக்கையால் கூட்டணிக்கு பாதிப்பு வருமா என்று கேட்டதற்கு, "காங்கிரஸ் - திமுக கூட்டணியில் எந்த வித பாதிப்பும் வராது. யாராலும் கூட்டணியை வெட்ட முடியாது," என்றார்.

ராசா மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, "அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை உண்டு," என்று தெரிவித்தார்.

நீரா ராடியா - பூங்கோதை தொலைபேசி உரையாடல் பற்றிய கேள்விக்கு, "அவர் வடநாட்டுக்காரர். இவர் மதுரை. இருவரும் பேசிக்கொண்டால் உங்களுக்கென்ன?" என்று ஆவேசமடைந்தார் முதல்வர் கருணாநிதி.